உலகம்

10 நாட்கள் ஒரே இடத்தில் வட்டமடித்த ஆடுகள்.. வெளியான அதிர்ச்சி CCTV வீடியோ.. ஆய்வாளர்கள் வியப்பு !

உலகெங்கும் அறிவியலுக்கு புலப்படாத பல விசித்திர நிகழ்வுகளை உலகம் முழுவதும் நடந்து கொண்டே வருகின்றன. விசித்திரங்களின் பின்னால் நடக்கும் காரணிகளை கண்டுபிடிப்பதே அறிவியலின் பணி ஏற்பதற்கு ஏற்ப பல விஷங்களுக்கு பின்னர் நடக்கும் உண்மையை அறிவியல் கண்டுபிடித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது அறிவியலுக்கு சவால் விடுக்கும் விதமாக ஒரு நிகழ்வு சீனாவில் நடைபெற்றுள்ளது. வடக்கு சீனாவின் இனெர் மங்கோலியாவில் உள்ள போடௌ என்ற இடத்தை சேர்ந்தவர் மியோ. இவர் ஆட்டு பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரின் பண்ணையில் மொத்தம் 34 ஆட்டுத்தொழுவங்கள் உள்ள நிலையில், ஒவ்வொரு பண்ணையிலும் நூற்றுக்கணக்கான செம்மறியாடுகள் இருக்கின்றன.

அதில் ஒரு தொழுவத்தில் உள்ள ஆடுகள் திடீரென வட்டமாக தொழுவத்துக்குள் நடக்கத்தொடங்கிய நிலையில், வரிசையாக மேலும் பல ஆடுகள் அதேபோல வட்டமாக நடந்துள்ளன. அதுவும் சில மணி நேரம் என்று இல்லாமல் சுமார் 10 நாட்கள் இரவு பகலாக இது போன்று வட்டமடித்துள்ளன.

ஒருசில ஆடுகள் நடுவில் நின்று இளைப்பாறிய நிலையில், பின்னர் மீண்டும் அதேபோல வட்டமடிக்கும் நிகழ்வை தொடர்ந்துள்ளன. இது தொடர்பாக வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் சமூகவலைத்தளத்தில் வெளியான நிலையில், இந்த சம்பவம் வைரலாகியுள்ளது.

'லிஸ்டீரியோசிஸ்' எனப்படும் ஒருவகை நோய் காரணமாக சில நேரத்தில் விலங்குகள் இப்படி செயல்படும் என்றாலும் இதற்கு காரணம் என்ன என்று இதுவரை ஆய்வாளர்களுக்கு சரியாக தெரியவில்லை. இதன் காரணமாக இது ஆய்வாளர்களின் கவனத்தை அதிகம் தூண்டியுள்ளது.

Also Read: கல்லூரி மாணவிக்கு முத்தம்.. ஜூனியரை கொடூரமாக ராகிங் செய்த சீனியர் மாணவ,மாணவியர்.. ஒடிசாவில் அதிர்ச்சி !