உலகம்

சொகுசுக் கப்பலில் நடந்த கொரோனா அட்டாக்.. 800 பயணிகளுக்கு பாதிப்பு உறுதி.. அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா !

உலகம் முழுவதும் 2019ம் ஆண்டு இறுதியில் பரவத்துவங்கிய கொரோனா தொற்று 2020ம் ஆண்டில் தீவிரமடைந்தது. இந்த தொற்றால் ஊரடங்கு போன்ற கடும் கட்டுப்பாடுகள் உதிக்கப்பட்டது. இந்த கொரோனா தொற்றால் உலகின் வல்லரசு நாடுகளாகக் கருதப்படும் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளே கடுமையான பாதிப்புகளை சந்தித்தது.

கடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். உலகமே கொரோனா தொற்றில் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த நிலையில் அதற்கு தடுப்பூசி தயாரிக்கும் முயற்சிகள் நடைபெற்றன.

அது வெற்றிபெற்று பல இடங்களில் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டன. அந்த தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட பின்னரே கொரோனா தொற்று உலக அளவில் குறையத்தொடங்கியது. எனினும் அவ்வப்போது கொரோனா தொற்று திடீரென அதிகரித்து அவ்வப்போது பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது.

அப்படி ஒரு சம்பவம் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் கடந்த ஒரு வாரமாக ஒமைக்ரான் எக்ஸ்பிபி வகை கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் அங்கு மெஜஸ்டிக் பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பலில் பயணித்த 800 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தக் கப்பல் சிட்னி அருகே நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் இருந்தவர்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளனர். கடந்த 2020-ம் ஆண்டு ரூபி பிரின்சஸ் சொகுசு கப்பலின் பயணித்த பயணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அதற்கு 28 பேர் உயிரிழந்தனர். இதனால் தற்போது மெஜஸ்டிக் பிரின்சஸ் கப்பலில் பல முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Also Read: களத்தில் நிகழ்ந்த ஒற்றை தவறு.. காயத்தால் இங்கிலாந்திடம் கோப்பையை இழந்த பாகிஸ்தான்!சாம்பியனான இங்கிலாந்து!