உலகம்
Mark குறைத்ததால் ஆத்திரம்.. வீட்டிற்கு சென்ற ஆசிரியரை கொலை செய்த சிறுவர்கள்: அமெரிக்காவில் அதிர்ச்சி!
அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் நோஹோமா கிராபர். இவர் பள்ளி முடித்து விட்டு வீட்டிற்குச் செல்லும் போது இரண்டு சிறுவர்கள் அவரை குத்தி கொலை செய்து உடலை அருகே இருந்த பூங்காவில் மறைத்துள்ளனர்.
பின்னர் அவரது உடலை மீட்ட போலிஸார் இது குறித்து விசாரணை செய்தனர். அதில் கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் வகுப்பில் படித்து வந்த வில்லார்ட் மில்லர், ஜெர்மி குடேல் ஆகிய இரண்டு மாணவர்கள்தான் கொலை செய்துள்ளனர் என்பதை போலிஸார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், தேர்வில் மதிப்பெண் குறைவாக கொடுத்ததால் ஆசிரியரை இருவரும் சேர்ந்து கொலை செய்தது கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொலை கடந்த 2021ம் ஆண்டு நடந்துள்ளது.
இந்த கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. மதிப்பெண் குறைந்து வழங்கியதால்தான் கொலை நடந்துள்ளது என போலிஸார் கூறிவந்தாலும், சிறுவர்களது வழக்கறிஞர்கள் அதை மறுத்து வருகின்றனர். இதனால் இன்னும் சிறுவர்கள் இருவருக்கும் ண்டனை வழங்காமல் உள்ளது நீதிமன்றம். மேலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் நீதிமன்ற விசாரணையில் ஆசிரியர் கொலை செய்யப்பட்டது உறுதியானால் சிறுவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்படும் என கூறப்படுகிறது. 16 வயது மாணவர்கள் தங்களது வகுப்பு ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!