உலகம்
ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்த பெண்.. காரை அசுத்தம் செய்ததாக அபராதம் விதித்த வாடகை கார் நிறுவனம் !
இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் பாரா காகனிண்டின் (வயது 26). இவருக்கு ஒன்றரை வயதில் மகன் இருக்கும் நிலையில், மீண்டும் கற்பமாகியுள்ளார். இந்த நிலையில், நிறைமாத கர்ப்பிணியான இவர் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு செல்லவேண்டியிருந்தது.
இதற்காக வாடகை கார் ஒன்றை புக் செய்த இவர் அதன்மூலம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேறு வழியின்றி கார் வேகமாக மருத்துவமனைக்கு சென்ற நிலையில், அவருக்கு காரிலேயே பிரசவம் நடந்து பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
அதன்பின்னர் கார் வேகமாக மருத்துவமனை சென்ற நிலையில், அங்கு காத்திருந்த டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் தாயையும் சேயையும் பரிசோதனை செய்தனர். பின்னர் இருவரும் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஓடும் காரில் குழந்தை பெற்றெடுத்த அந்த பெண்ணுக்கு வாடகை கார் நிறுவனம் அபராதம் விதித்துள்ளது. அதாவது அவருக்கு காரில் பிரசவம் நிகழ்ந்ததால் காரில் ஏற்பட்ட அசுத்தத்தை காரணம் காட்டி இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 60 பவுண்டு (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5.500) அபராதம் செலுத்த வேண்டும் என வாடகை கார் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில், இந்த விவகாரம் இங்கிலாந்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலர் வாடகை கார் நிறுவனத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“புறமுதுகு காட்டி ஓடுகிறவர்கள் நாங்கள் இல்லை; மக்களோடு மக்களாக இருந்து எதையும் எதிர்கொள்வோம்!” : உதயநிதி!
-
உதயநிதி ஸ்டாலின் விடுவிப்பு... தஞ்சையில் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள் !
-
“கைதுக்கு பயமில்லை... எதுவானாலும் நேருக்கு நேர் சந்திப்பேன்” – கெத்தாக பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின்!
-
உதயநிதி ஸ்டாலின் கைது கண்டனத்திற்குரியது.. தவெக அரசு அராஜகம் - அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்!
-
“காவிரி பிரச்சினையை திசை திருப்ப... உதயநிதியை கைது செய்து அராஜகம்!” : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!