உலகம்
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பிரபல பாப் singer: கொண்டாட்டத்தின்போது நடந்த சோகம்..ரசிகர்கள் அதிர்ச்சி!
HOLLOWEEN கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 150 பேர் உயிரிழந்துள்ள சம்பவத்தில் ஒருவர் கொரியாவை சேர்ந்த பிரபல பாப் சிங்கர் என்பது தெரியவந்துள்ளது.
ஆண்டுதோறும் இறந்தவர்களை நினைவுகூரும் விதமாக தென்கொரிய நாட்டில் ஹாலோவீன் விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு பிரபலங்கள், பொதுமக்கள் கலந்துகொள்வர். உலகை உலுக்கிய கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடாமல் இருக்க கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளின் அரசுகள் இது போன்ற விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தன.
இதன் காரணமாக முக்கிய பண்டிகைகள், விழாக்கள் பொது இடங்களில் இல்லாமல் வீட்டிலேயே கொண்டாடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளன. இதனால் 3 ஆண்டுகாலம் கொண்டாடாமல் இருந்த பண்டிகைகளை உலகளவில் பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
மேற்கத்திய நாடுகளில் பிரபலமாகி இருக்கும் ஹாலோவீன் தற்போது சில ஆண்டுகளாக தென்கொரியாவில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக சில ஆண்டுகள் ஹாலோவீன் அங்கு கொண்டாடப்படாத நிலையில், தற்போது அங்கு விமர்சையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
அந்த வகையில், தென் கொரியாவின் தலைநகரான சியோலிலுள்ள ஒரு முக்கியமான சந்தையில் ஹாலோவீன் விழாவை கொண்டாட பொதுமக்கள் பெரும் திரளாக கூடினர். போதிய முன்னேற்பாடுகள் செய்யப்படாத நிலையில், திடீரென அங்கு பெரும் கூட்டம் சேர்ந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
இந்த நெரிசலில் சிக்கி மூச்சு திணறி பலர் மயங்கிவிழுந்தனர். இதனைத் தொடர்ந்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். சுமார் 300 பேர் இந்த நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்ட நிலையில் அதில் பலர் மாரடைப்பு காரணமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சுமார் 300 வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையிலும் கூட உயிர் பலியை தவிர்க்கமுடியவில்லை. செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட தகவலின் படி இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 149 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 160க்கும் மேற்பட்டார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த நெரிசலில் சிக்கி பிரபல கொரிய பாப் சிங்கரான லீ ஜிகான் என்பவரும் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 24 வயதான இளம் பாப் சிங்கராகவும், நடிகராகவும் இருந்து வந்தார்.
Produce 101 என்ற பாட்டுப்போட்டிக்கான ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கென ரசிகர் கூட்டத்தையும் சேர்த்தார். இதைத்தொடர்ந்து ஆல்பம், நடிப்பு என தன்னை பிசியாக வைத்துக்கொண்ட இவர், 3 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த ஹாலோவீன் விழாவில் கலந்துகொண்டார்.
ஆனால் இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலுக்கு லீ பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவிற்கு ரசிகர்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
NIA வழக்குகளில் தனி நீதிமன்றம் அமைத்து 6 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு !
-
கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்த ஒன்றிய பாஜக அரசு - முதலமைச்சர் கண்டனம் !
-
நிர்மலா சீதாராமனுக்கு இது புரியாது, ஏனெனில் அவருக்கு புரிந்துகொள்ளும் தன்மை இல்லை - முரசொலி விமர்சனம் !
-
TNPSC குரூப் 2, 2ஏ-வில் 1270 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு : முழு விவரம் இதோ!
-
மெட்ரோ திட்டத்திலும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : DMK IT WING கண்டனம்!