உலகம்
சொந்த நாட்டின் மீதே குண்டு வீசிய தென்கொரியா.. பதிலடி கொடுக்க நினைத்து மன்னிப்பு கேட்ட ராணுவம் !
கொரிய தீபகற்பத்தில் இருக்கும் வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது. இதில் அமெரிக்காவின் முழு ஆதரவு தென்கொரியாவிற்கு இருப்பதால் வடகொரியாவுக்கு உலக நாடுகள் பயங்கர பொருளாதார தடையை விதித்துவருகின்றது.
எனினும், வடகொரியா அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் தொடர்ந்து எதிர்த்து நின்று வருகிறது. அமெரிக்க அச்சம் காரணமாக கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் ஏவுகணைகளையும் வடகொரியா உருவாகியுள்ளது.
அதனை பலமுறை வடகொரியா சோதனை நடத்தியுள்ளது. சமீபத்தில் இரண்டு வாரங்களில் 6-வது முறையாக வியாழக்கிழமை ஏவுகணை சோதனை மேற்கொண்டது வட கொரியா. இந்த ஏவுகணைகள் ஜப்பான் வான்வெளி வழியாக சென்று பசிபிக் கடலில் விழுந்தது.
வடகொரியாவின் இந்த முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிழக்கு கடற்பகுதியில் தென் கொரியாவும் அமெரிக்காவும் பல ஏவுகணைகளை செலுத்தின. அதைத் தொடர்ந்து தென்கொரிய ராணுவம் தனியே ஏவுகணை ஒன்றை செலுத்தியது.ஆனால் இந்த ஏவுகணை சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து நொறுங்கிவிட்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தென்கொரியா ராணுவம், ஹுயுன்மூ-2 என்ற இந்த ஏவுகணை வெடிக்கவில்லை என்றும், இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளது. மேலும், இது குறித்து கவலைகள் எழுந்ததற்கு மன்னிப்பும் கோரியுள்ளது.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!