உலகம்
குளோனிங் மூலம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஓநாய்..100 நாட்கள் வாழ்ந்து சாதனை.. பிரமிக்கவைக்கும் உருவாக்கம்!
உலகில் நாளுக்கு நாள் அறிவியல் வளர்ந்து வருகிறது. அதன் உச்சகட்டமாக கலவி இல்லாமலேயே இனப்பெருக்கம் செய்யும் குளோனிங் முறை தற்போது வெற்றி பெற்றுள்ளது. பல ஹாலிவுட் படங்கள் இதன் அடிப்படையில் வெளிவந்து குளோனிங் என்றால் என்ன என்பதை மக்களுக்கு உணர்த்தியுள்ளன.
இந்த நிலையில், ஆர்க்டிக் ஓநாய் ஒன்றை குளோனிங் செய்து சீனாவை சேர்ந்த சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம் சாதனை படைத்துள்ளது. குளோனிங் மூலம் கடந்த ஜூன் 10ஆம் தேதி உருவாக்கப்பட்ட இந்த ஓநாய் 100 நாட்களை கடந்து வாழ்ந்து வருகிறது. மேலும் அந்த ஓநாய் நலமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இதன் உருவாக்கம் பற்றியும் தற்போது தகவல் வெளிவந்துள்ளது. அதில்படி, ஒரு பெண் நாயின் அணுக்கருக்கள் மற்றும் ஒரு பெண் ஆர்க்டிக் ஓநாயின் சோமாடிக் செல்கள் ஆகியவற்றிலிருந்து 130க்கும் மேற்பட்ட புதிய கருக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து செயற்கையாக கரு வளர்ச்சியைத் தொடங்குமாறு தூண்டிவிடப்பட்டு பின்னர் வளரும் கருவானது, பின்னர் ஒரு வாடகைத் தாயின் வயிற்றில் பொருத்தப்பட்டு முழுக்குட்டி உருவாகும் வரை பராமரிக்கப்பட்டுள்ளது.
மருத்துவத்துறையில் இது மாபெரும் வெற்றியாக கருதப்படுகிறது. இதன் மூலம் இந்த துறையில் மற்றொரு மைல்கல் எட்டப்பட்டுள்ளதாகவும், பல்வேறு விலங்குகளில் இந்த சோதனை நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“மாற்றம் எனச் சொல்லி.. அண்டப் புளுகை, ஆதவ் அர்ஜுனா புளுகாக மாற்றிவிட்டார்களோ?” : இ.பரந்தாமன் கண்டனம்!
-
ஒரே நாளில்... கோவையை தொடர்ந்து மதுரை.. கொலை நகரமாகும் தூங்கா நகரம்... வேடிக்கை பார்க்கும் தவெக அரசு!
-
விபரீதமான விளையாட்டு... வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 8 பள்ளி மாணவர்கள் கைது.. கள்ளக்குறிச்சியில் பரபர!
-
“ஒன்னு மின்வெட்டு, இரண்டு அரிவாள் வெட்டு.. இதான் தவெக ஆட்சி” : முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“வேங்கைவயல் விவகாரத்தில் நீலிக்கண்ணீர்... மன்னிப்புக் கேட்க தயாரா?” : வன்னி அரசுக்கு கோவி.செழியன் கேள்வி!