உலகம்

ஆசை ஆசையாக சூட்கேஸை வாங்கிய குடும்பம்.. திறந்ததும் காத்திருந்த அதிர்ச்சி..நாடு விட்டு நாடு சென்ற வழக்கு !

வெளிநாடுகளில் பழைய வீட்டில் இருக்கும் பொருள்களை ஏழம் விடும் நிகழ்வு மிகப்பிரபலம். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் நியூசிலாந்தில் நடைபெற்ற பழைய பொருள்களை ஏலம் விடும் நிகழ்வு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட ஒரு குடும்பம் பழைய சூட்கேஸ் ஒன்றை ஏலத்தில் வென்று அதனை வீட்டுக்கு எடுத்துவந்துள்ளது. பெரும்பாலும் இதுபோன்ற பழைய சூட்கேஸ்களில் விதிவிதமான பழைய பொருள்கள் இருக்கும் என்பதால் அதனை ஆவலாக அந்த குடும்பத்தினர் திறந்துள்ளனர்.

ஆனால், அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. பழைய சூட்கேஸில் முழுவதும் மனித உடல் பாகங்கள் இருந்துள்ளது. மேலும் அதனை திறந்தவுடன் துர்நாற்றம் வந்துள்ளது. இதனால் அந்த குடும்பத்தினர் இதுகுறித்து காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் மனித உறுப்புகளை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். அதன் முடிவில், சூட்கேஸில் இருந்த மனித உடல் பாகங்கள் 2 குழந்தைகளுடையது எனத் தெரியவந்துள்ளது. பின்னர் இது தொடர்பாக போலிஸார் விரிவான விசாரணை நடத்தினர்.

அதில் குழந்தைகளின் பெற்றோர், 2018-ம் ஆண்டு தன்னுடைய 7 வயது மற்றும் 10 வயது குழந்தைகளைக் கொன்றுவிட்டு, அதை சூட்கேஸில் அடைத்துவிட்டு 40 வயது பெண் தென் கொரியாவுக்குத் தப்பியது தெரியவந்தது. அதன் பின்னர் அந்தக் குழந்தைகளின் தாயார் கொரியாவில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

இந்த சம்பவம் நியூசிலாந்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் தென் கொரியாவில் பிறந்து, நியூஸிலாந்தில் குடியுரிமை பெற்றவர் என்பதால், குற்றம்சாட்டப்பட்ட நபரை நியூசிலாந்துக்கு நாடு கடத்த வேண்டுமா என்பதை தென் கொரிய நீதிமன்றம் பரிசீலிக்கும் என நியூசிலாந்து அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Also Read: வன்கொடுமை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட 2 பட்டியலின சிறுமிகள் வழக்கில் திருப்பம்.. உ.பி-யில் அதிர்ச்சி !