உலகம்
ஆப்பிள் நிறுவனத்துக்கு 19 கோடி அபராதம்.. பிற நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக அரசு அதிரடி !
சாம்சங், ஒன் ப்ளஸ், நோக்கியா, விவோ, ரெட்மி என பல்வேறு ஸ்மார்ட் ஃபோன்கள் சந்தையில் விற்பனை செய்யப்பட்டாலும், ஆப்பிளின் ஐஃபோன் மீதான மவுசும், எதிர்ப்பார்ப்பும் இன்றளவும் குறையாமலேயே உள்ளது.
அதிலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 13 சீரிஸ் மாடல் போன் கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. அதைத் தொடர்ந்து சுற்றுசூழல் மாசு மற்றும் எலக்ட்ரானிக் மாசை குறைக்கும் வகையில், செல்போனுடன் சார்ஜரை விற்க முடியாது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது.
ஐ-போனுக்கு கூடவே அதற்கான சார்ஜரை வழங்கினால் அதை பலர் குப்பையில் போடுவதாகவும், இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதால் இந்த முடிவுக்கு வந்ததாக அந்நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் சார்ஜர் இல்லாமல் ஐ போன்-12 மாடலை விற்பனை செய்த ஆப்பிள் நிறுவனத்திற்கு பிரேசில் அரசு 19 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. மேலும், சார்ஜர் இல்லாத அனைத்து ஐபோன் விற்பனைக்கும் இடைக்கால தடை விதித்துள்ளது.
சார்ஜர் உடன் மட்டுமே செல்போன் விற்க வேண்டும் என பிரேசில் அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் அதற்கு மாறாக சார்ஜர் இன்றி ஐபோன் நிறுவனம் விற்பனையில் ஈடுபட்ட நிலையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓராண்டில் 15,500 பேர் மலையேற்றம்” : சுற்றுலாத்துறையில் முன்மாதிரியாக திகழும் தமிழ்நாடு!
-
கல்லறைத் தோட்டங்கள் - கபர்ஸ்தான்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆணை என்ன?
-
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் - நகர் ஊரமைப்பு இயக்ககம்: பணி நியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
”நெல் போக்குவரத்து ஒப்பந்த விதிகளின்படி முறையாகச் செய்யப்பட்டுள்ளது” : சக்கரபாணி அறிக்கை!
-
ரூ.1,248.24 கோடியில் 10 சாலைகள், 2 மேம்பாலங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!