உலகம்
"தானமாக கொடுத்ததாக நினைத்துக்கொள்ளுங்கள்.." மலேசிய பெண்ணை ஏமாற்றிய நபர்.. வீடியோ வெளியிட்டு உருக்கம் !
மலேசியாவை சேர்ந்தவர் ஃபஹதா பிஸ்தாரி (Fahada Bistari) என்ற இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த நிலையில், தான் வாங்கிய முதல் மாத சம்பளத்தை தனது அம்மாவுக்கு ஆசையாய் ஆன்லைனில் அனுப்பியுள்ளார்.
பின்னர் இது குறித்து தனது அம்மாவிடம் கேட்டபோது பணம் ஏதும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சோதனை செய்தபோது அவர் தவறுதலாக வேறு யாருக்கோ பணத்தை அனுப்பியுள்ளது தெரியவந்தது.
இதைக்கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், மாற்றி அனுப்பிய நபரை தொடர்பு கொண்டு பணத்தை திரும்ப தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவரோ, ' பணத்தை திரும்ப கொடுக்க முடியாது, தானமாக கொடுத்ததாக நினைத்துக்கொள்ளுங்கள்' என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் செய்வதறியாது திகைத்த பெண், இது குறித்து கண்ணீருடன் வீடியோ பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வரும் நிலையில், பெண்ணின் நிலையை கண்டு பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர். மேலும் அந்த நபர் செய்த செயலை குறித்தும் வசைபாடி வருகின்றனர்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”