உலகம்
"ஒட்டுண்ணி,இன அழிப்பாளர்கள்,உங்கள் நாட்டுக்கு திரும்பச்செல்லுங்கள்"-போலந்தில் விமர்சிக்கப்பட்ட இந்தியர்!
அமெரிக்காவின் அமைந்துள்ள டல்லாஸ் நகரத்தில் இருக்கும் கார் பார்க்கிங்கில் நான்கு இந்தியப் பெண்கள் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த அமெரிக்கப் பெண் ஒருவர் ’நீங்கள் எல்லோரும் இந்தியாவுக்கே திரும்பி போங்க. உங்களைப் பார்த்தாலே வேறுப்பா இருக்கிறது' என இனவெறியுடன் பேசியுள்ளார்.
மேலும், 'இந்தியாவில் வாழ்வது சிறப்பானது என்றால் நீங்கள் ஏன் இங்கே வருகீறிர்கள்' என்று பேசி ஆபாச வார்த்தைகளைக் கொண்டு திட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து அதே அமெரிக்காவில், கிருஷ்ணன் ஜெயராமன் என்ற இந்தியர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஃப்ரீமாண்டில் உள்ள டகோ பெல்லில் உணவருந்த சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொரு இந்தியரான தேஜிந்தர் சிங் என்பவரை கிருஷ்ணன் ஜெயராமனை இனரீதியாக வசைபாடியுள்ளார்.
ஒரே உணவகத்தில் இருந்த இருவருக்கும் விவாதங்கள் எழுந்த நிலையில், இதில் கோபமான தேஜிந்தர் சிங், 'நீங்கள் கேவலமாகத் தெரிகிறீர்கள். இது இந்தியா அல்ல. இனி இதுபோன்று பொது வெளியில் வர வேண்டாம்." என்று கூறியுள்ளார். இந்த இரு சம்பவங்களும் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் துரிதமாக செயல்பட்ட அமெரிக்க போலிஸார் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்தனர்.
இந்த நிலையில், தற்போது ஐரோப்பிய நாடான போலந்தில் இந்தியர் மீது இனரீதியிலான தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக வெளியான வீடியோவில் இரு வெள்ளை நிறத்தவரம் அங்கிருந்த இந்தியரை நோக்கி, ”நீங்கள் இந்தியரா? நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள். நீங்கள் ஏன் உங்கள் நாட்டுக்கு திரும்பிச் செல்லக் கூடாது. எப்போதும் நீங்கள் இந்தியர்கள் ஐரோப்பிய நாடுகளை ஏன் ஆக்கிரமித்துக் கொள்கிறீர்கள்.
படையெடுப்பது போல் நீங்கள் இங்கே பரவியுள்ளீர்கள். இங்கே ஒட்டுண்ணிகள் போல், இன அழிப்பாளர்கள் போல் எங்களைத் துன்புறுத்துகிறீர்கள். நீங்கள் ஏன் உங்கள் நாட்டுக்குச் சென்று உங்கள் நாட்டைக் கட்டமைக்கக் கூடாது. தெரிந்து கொள்ளுங்கள் போலந்து போலிஷ் மக்களுக்கான தேசம். நீங்கள் படையெடுக்காதீர்கள். திரும்பிச் செல்லுங்கள்” என்று அந்த நபர் மிகவும் கடுமையான சொற்களால் விமர்சிக்கிறார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், இதைப்பார்த்த பலரும் இதில் இருப்பவரை விமர்சித்து வருகின்றனர்.
Also Read
- 
	    
	      
“கால்களில் விழுந்து பழக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
 - 
	    
	      
”பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” : Chennai Press Club கண்டனம்!
 - 
	    
	      
தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக 2 பேர் நியமனம் : கழக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
 - 
	    
	      
வேலூரில் 49,021 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
 - 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!