உலகம்
நீச்சல் குளத்தில் விழுந்த பெரிய ஓட்டை.. ஒருவர் உயிரிழப்பு.. பார்ட்டியில் நிகழ்ந்த பரிதாபம் !
இஸ்ரேல் நாட்டிலுள்ள கர்மி யோசெப் என்ற நகரில் உள்ள தனியார் ஹோட்டலில், பார்ட்டி ஒன்று நடந்துள்ளது. சிலர் தங்களது பார்ட்டியை கொண்டாட அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்து குதூகலமாக இருந்து வந்தனர். அப்போது நீச்சல் குளத்தில் எதிர்பாராத விதமாக பெரிய பள்ளம் ஏற்பட, இருக்கும் தண்ணீர் எல்லாம் பள்ளத்தின் வழியே சென்று விட்டது. இதனால் ஒருவர் பள்ளத்தின் குழியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவத்தன்று இந்த நீச்சல் குளத்தில் 6 குளித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென்று ஏற்பட்ட பள்ளம் காரணமாக இரண்டு பேர் ஒதுங்கி நின்றுள்ளனர். மேலும் மற்ற இரண்டு பேரையும் அந்த குழி தண்ணீருடன் சேர்த்து இழுத்தது. இதில் 34 வயதுடைய நபர் ஒருவர் இலேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
மேலும் 32 வயதுடைய மற்றொரு நபர் அந்த குழியில் சிக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த நீச்சல் குளத்தில் ஏற்பட்ட பள்ளத்தை சிங்க்ஹோல் (Sinkhole) என்று சொல்வர். இதுபோன்ற சிங்க்ஹோல் நிலத்திற்கு அடியே இருக்கும் மண் நீரில் கரைந்து போகும்போது மெல்லிய அடுக்கு மட்டுமே இருக்கும். அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக இதுபோன்ற சிங்க்ஹோல்கள் ஏற்படலாம்.
சுண்ணாம்பு, கார்பனேட் பாறை அல்லது உப்புப் பாறைகள் இருக்கும் இடங்களில் சிங்க்ஹோல்கள் அதிகம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?