உலகம்
சமையல் கேஸ் வாங்க போன விவசாயி.. 80 லட்சம் ஜாக்பாட் அடித்த அதிசயம் - பின்னணி என்ன ?
அமெரிக்கா நாட்டிலுள்ள வடக்கு கரோலினா பகுதியை சேர்ந்தவர் வில்லியம் ஜோன்ஸ். 32 வயதான இவர் விவசாயத் தொழில் செய்து வருகிறார். அண்மையில் இவர் சமையல் எரிவாயு (GAS Cylinder) வாங்க ஒரு கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கே லாட்டரி டிக்கெட் விற்கப்பட்டது.
இதனை கண்ட வில்லியம், குறைந்த தொகைக்கு ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கியுள்ளார். அந்த டிக்கெட்டில் அவருக்கு 500 டாலர் பரிசு விழுந்தது (இந்திய மதிப்பில் ரூ.39,942). இதையடுத்து மீண்டும் ஒருமுறை வாங்கி பார்க்கலாம் என்ற எண்ணத்தில் 20 டாலர் பணத்துக்கு சீட்டு வாங்கியுள்ளார்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக அவருக்கு 100 மில்லியன் டாலர் பரிசுத் தொகை கிடைத்துள்ளது (இந்திய மதிப்பில் ரூ.7,98,88,85) ஆகும்.
இந்த அதிர்ஷ்ட சற்றும் எதிர்ப்பாராத வில்லியம், கிடைத்த லாட்டரி பணத்தை தனது திருமணத்திற்கு செலவிடப்போறதாக கூறியுள்ளார். இப்படி அதிர்ஷ்டம் மேல் அதிர்ஷ்டம் அடித்த வில்லியமை கண்டு அங்குள்ள மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!