உலகம்

புயலில் சிக்கி இரண்டாக உடைந்த கப்பல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ! கடலில் விழுந்தவர்கள் நிலை என்ன?

சீனாவுக்கு சொந்தமான ஹாங்காங் நகரில் இருந்து தென்மேற்கே 160 கடல் மைல் தொலைவில் வணிக கப்பல் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது அங்கு புயல் காரணமாக ஏற்பட்ட அலை சீற்றத்தில் இந்த கப்பல் சிக்கிக்கொண்டது.

ஒருகட்டத்தில் அலையின் தாக்குதலை தாங்க முடியாமல் அந்த கப்பல் மூழ்கத்தொடங்கியது. உடனடியாக தங்கள் உயிரை காப்பாற்ற கப்பலின் அபாய நிலையை குறித்து அங்கிருந்த பணியாளர்கள் மீட்பு படைக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து ஹெலிகாப்டர் மூலம் அந்த பகுதிக்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் அங்கு சிக்கியிருந்த 3 பேரை மீட்டனர். ஆனால் மீட்பு படை வருவதற்குள் கப்பலில் இருந்த ஏராளமான பணியாளர்கள் கப்பலில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதற்கிடையே அந்த கப்பல் புயலில் சிக்கி இரண்டாக உடைந்து கடலில் மூழ்கியது. 30 பேர் கொண்ட பணியாளர்களில் 3 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில் மீதம் இருந்தவர்கள் உயிரிழந்திருக்ககூடும் என அச்சம் எழுந்துள்ளது.

தென் சீனக் கடலின் மத்தியப் பகுதியில் உருவான சாபா புயலின் காரணமாக இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பலின் இருப்பிடம் மணிக்கு 144 கிலோமீட்டர் வேகத்தில் காற்றையும், 10 மீட்டர் உயர அலைகளையும் பதிவு செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலும் இந்த சம்பவம் நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: பக்கத்து வீட்டு நாய் குரைத்ததால் ஆத்திரம்.. நாய் உரிமையாளரை இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கிய நபர்!