உலகம்
“தன்னை தானே SELFIE எடுத்த செயற்கைக்கோள்..” : இணையத்தை கலக்கும் வீடியோவின் பின்புலம் என்ன?
கடந்த ஏப்ரல் மாதம் SpaceX இன் Falcon 9 என்ற ராக்கெட் மூலம் செயற்கைகோள் ஒன்று ஏவப்பட்டது. பூமியை புகைப்படம் எடுக்க ஏதுவாக இந்த செயற்கைகோளில் செல்ஃபி ஸ்டிக்கோடு 4k GoPro Hero 7 கேமராவும் இணைக்கப்பட்டிருந்தது.
இந்த செயற்கைகோள் ஆஸ்திரேலியா அருகில் உள்ள கிரேட் பேரியர் ரீஃப் மீது பறந்துகொண்டிருந்தபோது GoPro Hero 7 கேமரா மூலம் செல்பி வீடியோ ஒன்றை எடுத்துள்ளது. இந்த வீடியோவை NanoAvionics இன் இணை நிறுவனர் மற்றும் CEO Vytenis Buzas என்பவர் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவில் பூமியின் அழகிய தோற்றம் தெரியும் நிலையில் அதில் சந்திரன் செல்லும் காட்சியும் பதிவாகியுள்ளது. மேலும் பூமியின் பல்வேறு இடங்கள் இந்த வீடியோவில் தென்படுகிறது. மேலும் அதில் பூமியின் மேல் உள்ள மேகக்கூட்டங்களும் தென்படுகின்றன.
இந்த வீடியோ குறித்து கூறியுள்ள Vytenis Buzas, "நமது கிரகத்தின் பாதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்த விரும்புகிறோம். செயற்கைக்கோள்கள் மூலம் பூமியை அவதானிப்பது, குறிப்பாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றங்களை கண்காணிப்பதற்காக இந்த செயற்கைகோளை அனுப்பியுள்ளோம்" எனக் கூறியுள்ளார்.
பூமியின் காலநிலையை அறிந்து கொள்ள இதுவரை பல்வேறு செயற்கைகோள்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், முதல் முறையாக செயற்கைகோள் ஒன்று செல்பி மூலம் வீடியோ அனுப்பியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!