உலகம்
14 வயது சிறுவன் மூக்கில் சிக்கிய 5 நாணயங்கள்.. பெற்றோரிடம் சிறுவன் கூறிய அதிர்ச்சி காரணம் என்ன தெரியுமா?
இங்கிலாந்து நாட்டிலுள்ள தெற்கு லண்டனை சேர்ந்தவர் உமைர் கமர் (14). பள்ளி சிறுவனான இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வந்துள்ளது. இதை பற்றி அந்த சிறுவன், தனது பெற்றோரிடம் கூற அவர்கள் இதற்காக பல்வேறு மருத்துவர்களை அணுகியுள்ளனர். இருப்பினும் இந்த சிறுவனின் பிரச்சனை தீரவில்லை.
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு, மூக்கில் ஏதோ ஒன்று அடைந்திருப்பது போல் உள்ளது என்று அந்த சிறுவன் தனது தாயிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் மூச்சை வேகமாக இழுத்து வெளிவிட சொல்லியிருக்கிறார். இதனால் தனியாக ஒரு அறைக்கு தனியாக சென்ற அந்த சிறுவன், தனது இரு காதுகளிலும் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு, ஒரு மூக்கை மூடிக் கொண்டு, மற்ற மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுத்து, வேகமாக வெளியிட்டுள்ளார். அப்போது மூக்கில் இருந்து ஒரு சின்ன நாணயம் வெளியே வந்து விழுந்துள்ளது.
இதைக்கண்டதும் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன், தனது மூக்கில் இது எப்படி வந்தது என யோசித்தான். அப்படி யோசிக்கையில், தனது சிறு வயதில் தன் மூக்கில் 5 பென்ஸ் (five-pence) நாணயத்தை அழுத்தி விளையாடியது நினைவுக்கு வந்துள்ளது. இதையடுத்து இதனை அவரது தாயிடம் கூறியுள்ளார் சிறுவன்.
எது என்னவோ தனது மகனின் மூச்சு திணறலுக்கு காரணம் கண்டு சிகிச்சையும் முடிந்ததை நினைத்து பெருமூச்சு விட்டுள்ளனர், அவரது குடும்பத்தினர். இது குறித்து பேசிய மருத்துவர்கள், "5 பென்ஸ் நாணயம் இதுபோல் மூக்கில் போய் அடைத்துக்கொள்ளும் அளவிலானது தான். எனவே இப்படி நடக்க வாய்ப்புள்ளது" என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!