உலகம்

8-வது மாடி ஜன்னலில் தொங்கிய 3 வயது குழந்தை.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ஹீரோ - திக் திக் வீடியோ!

கஜகஸ்தான் நாட்டின் தலைநகரமான நூர்-சுல்தானில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த கட்டத்தின் 8 வது மாடி ஜன்னல் வழியா 3 வயது சிறுமி தொங்கிக் கொண்டிருந்ததை அந்த வழியாக சென்ற சபித் என்பவரும். அவரின் நண்பரும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனே, சிறுமியை மீட்பதற்காகசபித் ஷொண்டக்பேவ் அவரது நண்பருடன் சேர்ந்து எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கட்டத்தின் கண்ணாடி மீது ஏறி சிறுமியை பத்திரமாக காப்பாற்றி மீட்டுள்ளனர். இவர்கள் சிறுமியை மீட்கும் திக் திக் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் தங்களின் உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றிய இருவருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த சம்பவம் குறித்து அவர் கூறுகையில், “ என்னிடம் பாதுகாப்பு உபகரணம் எதுவும் இல்லை, அதனால் தான் என் நண்பர் என் கால்களைப் பிடித்துக் கொண்டார்.அதே வேளையில் நான் எதைப்பற்றியும் யோசிக்கவில்லை, குழந்தையைக் காப்பாற்ற மட்டுமே விரும்பினேன்” என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சபித்தின் இந்த துணிச்சலான, தன்னலமற்ற செயலுக்காக, நூர்-சுல்தான் நகரின் துணை அமைச்சர் அவருக்கு பதக்கம் வழங்கி கெளரவப்படுத்தியிருக்கிறார்.

சபித்திற்கு கைசிலோர்டாவில் மனைவி மற்றும் 4 குழந்தைகள் இருப்பதாகவும், தன் குடும்பத்திற்காக நூர்-ச்ல்தான் நகரில் தனியாக தங்கி வேலைப் பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சபித்தின் இந்த தன்னலமற்ற செயலுக்காக 3 படுக்கை அறைகள் கொண்ட அபார்ட்மெண்ட் மற்றும் ஒரு பெரிய டி.வி. யும் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

எந்த எதிர்ப்பாப்புமின்றி குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய சபித் மற்றும் அவரது நண்பரின் செயல் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Also Read: ‘ரீஎண்ட்ரி’ கொடுத்த கவுண்டமணி.. எழுந்து நின்று வரவேற்பு அளித்த திரையுலகம்: சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்!