உலகம்

வடகொரியாவுக்கு பதிலடி கொடுத்த ஜப்பான்.. மியான்மர் ராணுவ ஆட்சிக்கு ஆதரவு தரும் சீனா! #5IN1_WORLD

வடகொரியா மீது ஜப்பான் புதிய தடைகளை விதிப்பு!

கடந்த வாரம் வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஏவியதற்கு பதிலடியாக ஜப்பான் வடகொரியா மீது புதிய தடைகளை அறிவித்துள்ளது. "கடத்தல், அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் போன்ற பிரச்சினைகளை தீர்க்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு வட கொரியாவை ஜப்பான் வலியுறுத்துகிறது" என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஹிரோகாசு மாட்சுனோ தெரிவித்தார். டோக்கியோ 2006 ஆம் ஆண்டு முதல் வட கொரியாவிற்கு எதிராக ஒருதலைப்பட்ச பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது, தற்போது அந்த எண்ணிக்கை 129 நிறுவனங்கள் மற்றும் 120 நபர்களாக அதிகரித்துள்ளது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது

ஃபயர் ராக்கெட்டை சோதிக்கிறது ஸ்பேஸ்எக்ஸ்!

Space-X சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தனது முதல் தனியார் விண்வெளி ஆய்வு பணியான ஆக்ஸியம்-1 மிஷனுக்கு முன்பாக திங்களன்று பால்கன் 9 ஃபயர் ராக்கெட்டை சோதனை செய்ய திட்டமிட்டுள்ளது. சோதனை திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடந்தால், SpaceX புதன்கிழமையன்று Axiom-1 மிஷனை தொடங்க முயற்சிக்கும். இந்த மிஸனில் நாசா விண்வெளி வீரர்கள் அல்லாமல் 4 தனியார் குடிமக்களை Orbital outpost-க்கு கொண்டு செல்வது சிறப்புக்குரிய அம்சமாகும்.

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் மூன்று பாலஸ்தீனியர்களை துப்பாக்கியால் சுட்டனர்!

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பாலஸ்தீனிய போராளிகளைக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். செவ்வாயன்று, துப்பாக்கிச் சூடு தாக்குதலில் டெல் அவிவ் புறநகர்ப் பகுதியில் நான்கு பொதுமக்கள் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டனர். அந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பில் உள்ள West Coast-ஐ சேர்ந்த 26 வயதான பாலஸ்தீனர் தியா ஹமர்ஷே என்று உள்ளூர் ஊடகங்கள் அடையாளம் கண்டன. இந்நிலையில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு சீனா ஆதரவு!

'மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சியை ஆதரிப்போம்' என, சீனா தெரிவித்துள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான மியான்மரில், ராணுவ ஆட்சி நடக்கிறது. இந்நாட்டு வெளியுறவு அமைச்சர் வுன்னா, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உடன் தொலைபேசியில் பேசினார். "அண்டை நாடுகளிடம் நட்புறவுடன் இருக்கவே, சீனா விரும்புகிறது. மியான்மரில் எந்த சூழ்நிலை இருந்தாலும், ராணுவ ஆட்சிக்கு முழுமையாக ஆதரவு தருவோம். சுதந்திரமான வெளியுறவு கொள்கையை, சீனா பின்பற்றுகிறது. சீனா - மியான்மர் பொருளாதார பாதை அமைக்கும் திட்டம் விரைவுப்படுத்தப்படும்." என்று வாங் யி கூறியுள்ளார்

Also Read: 7-வது முறையாக உலக கோப்பை வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா! #SPORTSUPDATES