உலகம்

விண்ணை முட்டும் ஆணுறைகளின் விலை; இரண்டே வாரத்தில் 170 சதவிகிதம் விற்பனை அதிகரிப்பு!

நேட்டோ நாடுகளுடனும், ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இணையும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்ரவரி 24ம் தேதி முதல் ரஷ்யா உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதனால் ரஷ்யாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து மேற்கத்திய நாடுகள் உட்பட பல நாடுகளும் ரஷ்யா உடனான வணிக உறவை முறிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி ஏற்கெனவே பெப்சி, நெட்ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட பல சேவை மற்றும் விற்பனை நிறுவனங்களை ரஷ்யாவில் இருந்து வெளியேறியிருக்கின்றன. அந்த பட்டியலில் தற்போது பிரபல ஆணுறை தயாரிப்பு நிறுவனமான ரெக்கிட்டும் இணைந்துள்ளது. இந்த நிறுவனம்தான் டியூரெக்ஸ் எனும் ஆணுறையை தயாரிக்கிறது.

இந்த நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்தாததன் காரணத்தால், ரஷ்யாவில் தனது தயாரிப்பை ரெக்கிட் நிறுத்தியுள்ளது. இதனால் ரஷ்யாவில் ஆணுறைக்கு குறிப்பிடத்தக்க பற்றாக்குறை ஏற்பட்டு அதன் விலையும் அதிகரித்திருக்கிறது.

Also Read: புத்தாண்டு அதுவுமா குவிந்த ஆணுறை ஆர்டர்.. ஸொமேட்டோ நிறுவனர் வெளியிட்ட அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரம்!

இப்படி இருக்கையில், ஷ்யாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஸ்டோரான Wildberry தரவுப்படி, மார்ச் முதல் இரண்டு வாரங்களில் ஆணுறை விற்பனை 170 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் ஆணுறைகளின் விலை கடந்த ஆண்டை விட 35 சதவிகிதம் அதிகரித்ததோடு, பல்பொருள் அங்காடியின் விற்பனையும், மருந்து கடைகளின் விற்பனையும் 30 சதவிகிதம், 36.6 சதவிகிதம் முறையே அதிகரித்திருக்கிறதாம்.

மேலும், மருந்தக ஆணுறைகளின் கொள்முதல் விலை முந்தைய ஆண்டை விட 32% உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் பல்பொருள் அங்காடி விற்பனை 30% அதிகரித்துள்ளது என மற்றுமொரு ரஷ்ய நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read: ’முட்டைகோஸ் என நினைத்து இறந்த எலியை சாப்பிட்ட ஸ்பெயின் இளைஞர்’ - ரெடிமேட் காய்கறிகளால் வந்த வினை!