உலகம்
ஐ.நா-வின் தீர்மானத்தை முறியடித்த ரஷ்யா.. வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா - காரணம் என்ன?
உலக நாடுகளின் எதிர்ப்பைப் புறந்தள்ளி உக்ரைன் மீது ரஷ்யா மூன்றாவது நாளாகத் தாக்குதல் தொடுத்து வருகிறது. மேலும் உக்ரைன் தலைநகரான கீவ் நகரை ரஷ்ய ராணுவ வீரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். இதனால் உக்ரைன் மக்கள் தங்களின் சொந்த நாட்டை விட்டு, கண்ணீருடன் வெளியேறி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யாவை கண்டித்து ஐ.நா சபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காதததால் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானம் தோல்வியில் முடிந்துள்ளது.
ஐ.நா கொண்டுவந்த இத்தீர்மானத்தை ஆதரவாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், அயர்லாந்து, நார்வே, மெக்சிகோ, பிரேசில உள்ளளிட்ட 11 நாடுகள் வாக்களித்துள்ளது. இதையடுத்து ரஷ்யா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ஐ.நா கொண்டுவந்த தீர்மானத்தை முறியடித்துள்ளது.
வாக்கெடுப்பிற்கு முன்னதாக தீர்மானம் குறித்து பேசிய இந்தியாவுக்கான பிரதிநிதி, "பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் போனது வருத்தமளிக்கிறது. மீண்டும் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும், மனித உயிர்களை விலையாகக் கொடுத்து எந்தத் தீர்வையும் எட்ட முடியாது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!