உலகம்

மது குடித்ததால் கைது செய்யப்பட்ட பிரதமரின் வளர்ப்பு மகன்.. ஒரே நாளில் விடுதலை : எங்கு தெரியுமா?

பாகிஸ்தானில் உள்ள கடாபி ஸ்டேடியம் அருகே வந்த காரை நிறுத்தி போலிஸார் சோனை செய்தனர். அப்போது காரில் இருந்த மூன்று பேரிடமும் மதுபானம் இருந்ததை அடுத்து போலிஸார் அவர்களைக் கைது செய்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட மூன்று பேரில் ஒருவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வளர்ப்பு மகன் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலிஸார் கைது செய்தபோது நான் பிரதமரின் மகன் என அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் உயர் அதிகாரிகளின் உத்தரவை அடுத்து கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் அன்றைய தினமே போலிஸார் விடுவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூசா மனேகா, இம்ரான் கானின் மூன்றாவது மனைவியின் வளர்ப்பு முகன் ஆவார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 1995ஆம் ஆண்டு பிரிட்டனை சேர்ந்த ஜெமீகா கோல்டுஸ்மித்தை திருமணம் செய்து 2004ஆம் ஆண்டு விவிகரத்து பெற்றார். பின்னர் ரேஹம் கானை திருமணம் செய்து ஒரே ஆண்டில் விவகாரத்து செய்தார்.

இதையடுத்து மூன்றாவதாக புஷ்ரா பீவிகான் என்பவரைத் திருமணம் செய்துள்ளார். இவருக்குப் பிறந்த மகன்தான் மூசா மனேகா. பாகிஸ்தான் நாட்டில் மதுபானம் விற்பதும், குடிப்பதும் சட்டவிரோதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: கல்யாணத்தை நிறுத்த இப்படியொரு ப்ளானா? - பீகாரில் மணமகனும், தந்தையும் செய்த செயலால் பரபரத்த திருமண வீடு!