உலகம்
மனைவியை கொன்று ஒருவாரம் சடலத்துடன் இருந்த கணவர்... விசாரணையில் வெளிவந்த ‘ஷாக்’ தகவல்!
அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்தைச் சேர்ந்தவர் சார்லஸ் ஷேர்வூட். இவரது மனைவி சுசன் கிளப்ஸ். இந்த தம்பதியினர் உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனாவை கண்டு அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில், சில நாட்களாக இவர்கள் வீடு பூட்டியே இருந்தைப் பார்த்த அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மனைவி சடலத்துடன் சார்லஸ் அமர்ந்திருந்தார்.பின்னர் அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.
இதில், கொரோனா அச்சம் காரணமாகத் தம்பதிகள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதன்படி மனைவியை முதலில் கணவன் கொலை செய்துள்ளார். இதன்பின்னர் இவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
ஆனால் பயத்தின் காரணமாக அவரால் தற்கொலை செய்து கொள்ள முடியவில்லை. இதனால் மனைவியின் சடலத்தின் அருகே ஒருவாரம் இருந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து மனைவியைக் கொலை செய்த குற்றத்திற்காக அவரை போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“த.வெ.க அரசு காப்பி பேஸ்ட் அரசு ; ஆளுநர் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” : உதயநிதி ஸ்டாலின் முழு பேட்டி!
-
திருவாரூரில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் : த.வெ.க ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது!
-
வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 5 சவரன் நகை பறிப்பு: எடப்பாடியில் பரபரப்பு!
-
“கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்கும் த.வெ.க அரசு” : தி.மு.க IT WING கண்டனம்!
-
“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!