உலகம்
தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. சுற்றுலாப் பயணிகள் 7 பேர் பலி : நடந்தது என்ன?
பெருநாட்டில் புகழ்பெற்ற தொல்பொருள் ஆய்வு தலமான Nazca Lines என்ற பகுதி உள்ளது. வான்வழியாக இப்பகுதியைக் காண அழகாக இருக்கும். இதனால் சுற்றுலாப் பயணிகள் பலர் விமானத்தை வாடகைக்கு எடுத்து Nazca Lines பகுதியை வான்வழியாகக் கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில், சிலி மற்றும் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த 5 பேர் மரியா ரீச் விமான நிலையத்திலிருந்து செய்னா 207 என்ற விமானத்தை வாடகைக்கு எடுத்துச் சென்றனர். இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடம் கட்டுப்பாட்டை இழந்தது.
இதனால் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் பயணம் செய்து சுற்றுலாப் பயணிகள் 5 பேர் மற்றும் விமான ஓட்டுநர்கள் 2 பேர் என மொத்தம் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானம் கீழே விழுந்து நொறுங்கிய காட்சியைப் பார்த்து சக சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த விமான விபத்திற்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து அமைச்சகம் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே 2010ம் ஆண்டும் இதேபோன்று விபத்து நடந்துள்ளது. அப்போதும் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!