உலகம்
“அணுசக்தி - ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டுமானால்..?” : அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த ‘வட கொரியா’ !
வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் மோதல் உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் அணுசக்தி திறன்களை ஓரளவு நிறுத்தி வைப்பதற்கு பதிலாக, எங்கள் மீதான பொருளாதார தடைகளை படிப்படியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிடம் வடகொரியா கூறியது. அதை அமெரிக்கா ஏற்கவில்லை.
இந்நிலையில், புத்தாண்டு பிறந்தது முதல் வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதை தொடர்ந்து வட கொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஆனாலும் வடகொரியா அடங்கவில்லை.
இந்த நிலையில் அந்த நாடு 2 பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை ஏவி, கடலில் செலுத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்தது. இந்த மாதத்தில் வடகொரியா நடத்திய 6-வது ஏவுகணை சோதனை இதுவாகும். இதுபற்றி தென் கொரியாவின் கூட்டுப்படை தலைவர் கள் கூறுகையில், “வடகொரியா குறுகிய தொலைவு ஏவுகணை கள் இரண்டை 5 நிமிட இடைவெளியில் கடற்கரை நகரமான ஹாம்ஹங்கில் இருந்து ஏவியது. அவை 190 கி.மீ. தொலைவுக்கு பறந்தன. பின்னர் அவைகடலில் விழுந்தன” என தெரிவித்தனர்.
தன் மீதான அணு ஆயுத மற்ற நடவடிக்கைகளுக்கு எதிராக முடக்கப்பட்ட அமெரிக்கா தலைமையிலான பொருளாதார தடைகளை விடுவிப்பதை நோக்கமாக கொண்டு, நிறுத்தப்பட்ட நீண்ட கால பேச்சுவார்த்தைகள் மீது ஜோ பைடன் நிர்வாகத்துக்கு அழுத்தம் தருவதுதான் வட கொரியாவின் நோக்கம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.
அமெரிக்க இந்தோ பசிபிக்கட்டளை கூறுகையில், ‘‘வட கொரியாவின் இந்த ஏவுகணை சோதனைகள், அதன் ஆயுததிட்டத்தின் சீர்குலைக்கும் தாக்கத்தை எடுத்துக்காட்டும் அதே வேளையில், அமெரிக்கர்களுக்கோ அல்லது பிராந்தியத்துக்கோ அல்லது நமது நட்பு நாடுகளுக்கோ உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்த வில்லை’’ என தெரிவித்தது.
ஜப்பான் பிரதமர் புமியோகிஷிடா, ‘‘வட கொரியா நடத்திய ஏவுகணை சோதனைகளால், ஜப்பானிய கடற்கரையை சுற்றி கப்பல் மற்றும் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை’’ என்பதை உறுதிபடுத்தினார். அதே நேரத்தில் வடகொரியாவின் தொடர்ச்சியான ஏவுகணை சோதனை, மிகவும் வருந்தத்தக்கவை, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மீறுபவை எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.
வடகொரியாவின் முக்கிய கூட்டாளியும், பொருளாதார உயிர்நாடியுமான சீனாவில் 4- ந்தேதி குளிர் கால ஒலிம்பிக்போட்டி தொடங்கி நடந்து முடிந்த பின்னர், வட கொரியா ஆயுத சோதனைகளை மேலும் தீவிரப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Also Read
-
“முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!