உலகம்
சேமிப்பு கிடங்குகள் மீது ட்ரோன் தாக்குதல்.. 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் ஈரான் ஆதரவு கிளர்ச்சி படையான ஹவுத்தி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய சவுதி தலைமையிலான கூட்டணியை எதிர்த்து செயல்படும் அமைப்பாக இந்த ஹவுத்தி அமைப்பு அறியப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் அபுதாபி விமான நிலையம் அருகே உள்ள முசாஃபா பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனமான ADNOC மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று ஆயில் டாங்கர்கள் தீப்பற்றி எரிந்து வெடித்துச் சிதறின.
இந்தத் தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். முதலில் விபத்து என அறியப்பட்ட நிலையில், அதிகாரிகளின் ஆரம்பகட்ட விசாரணையில் ட்ரோன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இது திட்டமிட்ட தாக்குதல் என்பது தெரியவந்தது.
பின்னர் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள், கிளர்ச்சியாளர்கள் மீது நேற்றைய தினம் வான்வெளி தாக்குதல் நடத்தினர். இதில் அப்படையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.
முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது தாக்குதல் நடத்தப்போவதாகக் கடந்த காலங்களில் பல முறை இந்த அமைப்பு அச்சுறுத்திவந்த நிலையில், இப்போது தாக்குதலை நடத்தியுள்ளது.
இதனால் உலக நாடுகள் முழுவதும் நேற்று கச்சா எண்ணெய் விலை கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகபட்ச அளவை எட்டியது. சர்வதேச அளவுகோலாக இருக்கும் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு விழுக்காடு அதிகரித்து சுமார் 87.22 டாலராகவும் நிர்ணயிக்கப்பட்டது. கடந்த அமர்வில் இது 86.48 டாலராக இருந்தது.
மேலும், WTI கச்சா எண்ணெய் விலையும் பீப்பாய் ஒன்றுக்கு 1.3% விலை அதிகரித்து 84.89 டாலராக காணப்பட்டது. இதனால் இந்திய சந்தையில், கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு நேற்று 89 ரூபாய் அதிகரித்து ரூ.6,350க்கு வர்த்தகமானது. இது கடந்த அமர்வில் ரூ.6,261 ஆக இருந்தது. இதனிடையே சர்வதேச சந்தையில் இன்றும் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1%க்கும் மேல் அதிகரித்து இருக்கிறது.
ஐக்கிய அரபு அமிரகத்தில் மீது நடந்த தாக்குதலுக்கு பிறகு 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது உலக நாடுளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!
-
தமிழ்நாடு திறன் பதிவேடு (AI Powered TNSKILL Registry) ! : துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்!
-
இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்னது என்ன?