உலகம்

அபுதாபியில் ட்ரோன் தாக்குதல்; கிளர்ச்சி படை மீது பதிலடி தாக்குதல் நடத்திய UAE: அதிகரிக்கும் போர் பதற்றம்!

ஐக்கிய அரபு அமிரகத்தை தலைநகர் அபுதாபியில் ஏமனில் ஈரான் ஆதரவு கிளர்ச்சி படையான ஹவுத்தி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய சவூதி தலைமையிலான கூட்டணியை எதிர்த்து செயல்படும் அமைப்பாக இந்த ஹவுத்தி அமைப்பு அறியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் அபுதாபி விமான நிலையம் அருகே உள்ள முசாஃபா பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனமான ADNOCல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று ஆயில் டாங்கர்கள் தீப்பற்றி ஏரிந்து வெடித்துச் சிதறின.

இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் பலியாகினர். முதலில் விபத்து என அறியப்பட்ட நிலையில், அதிகாரிகளின் ஆரம்பக்கட்ட விசாரணையில் ட்ரோன் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இது திட்டமிட்ட தாக்குதல் என்பது தெரியவந்தது.

பின்னர் இதற்கு பதிலடிக் கொடுக்கும் வகையில், சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள், கிளர்ச்சியாளர்கள் மீது நேற்றைய தினம் வான்வெளி தாக்குதல் நடத்தின. இதில் அப்படையைச் சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரிகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர்.

முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது தாக்குதல் நடத்தப்போவதாகக் கடந்த காலங்களில் பல முறை இந்த அமைப்பு அச்சுறுத்திவந்த நிலையில், இப்போது தாக்குதலை நடத்தியுள்ளது.

Also Read: பிறந்தநாள் பரிசா இததான் கொடுப்பாங்களா? கொதித்து போன டீச்சர்; வீட்டு ஓனரை இறுக்கும் பெங்களூர் போலிஸ்!