உலகம்

எலியின் மறைவால் சோகத்தில் மூழ்கிய கம்போடியா மக்கள்.. அப்படி என்ன சாதித்தது அந்த எலி?

கம்போடியா நாட்டின் பாதுகாப்பிற்காக 60 லட்சத்திற்கும் அதிகமான கண்ணிவெடிகளை அந்நாட்டு அரசு பல்வேறு இடங்களில் புதைத்துள்ளது. இந்த வெடிகளால் சொந்த நாட்டு மக்களே பலர் உயிரிழக்க நேர்ந்தது.

இதனால், புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்தது. மேலும் மனிதர்களைக் கொண்டு அகற்றினால் பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விலங்குகளைப் பயன்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

இதற்காக எலிகளுக்கு கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்க பிரத்யோகமாக பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. இப்படிப் பயிற்சி பெற்ற மகாவா என்ற எலிதான் 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்து அசத்தியுள்ளது.

மேலும், மகாவா எலியின் இந்தச் சாதனையைப் பாராட்டி இங்கிலாந்து விலங்குகள் நல அமைப்பு தங்கப்பதக்கம் வழங்கி கவுரப்படுத்தியது. இந்த அமைப்பு எலி ஒன்றுக்கு தங்கப்பதக்கம் வழங்கியது இதுவே முதல்முறை.

இப்படி கம்போடியா நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்றிய மகாவா எலி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மகாவா எலி நேற்று சிசிக்சை பலனின்றி உயிரிழந்தது. லட்சக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றிய மகாவா எலி உயிரிழந்ததால் கம்போடியா நாட்டு மக்கள் சோகக் கடலில் மூழ்கியுள்ளனர்.

Also Read: “கள்ளச்சாராய பாட்டில்கள் காணாமல் போனதற்கு யார் காரணம் தெரியுமா?” - எலி மீது பழி போட்ட உ.பி. போலிஸ்!