உலகம்

30 ஆண்டுக்கால ஆட்சியின் மீது அதிருப்தி.. மக்கள் போராட்டத்தில் மூண்ட வன்முறை: கஜகஸ்தானில் என்ன நடக்கிறது?

மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் இயற்கை வளங்கள் அதிகம் உள்ளது. இருப்பினும் அங்குள்ள கச்சா எண்ணெய்களை மண்ணிலிருந்து பிரித்தெடுத்துச் சுத்திகரிக்கும் பணிகளில் வெளிநாட்டு நிறுவனங்களே அதிக அளவில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக செவ்ரான், எக்சோன் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஆதரவாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தான் அரசு சமையல் ஏரிவாயு மீதான அதன் விலை வரம்பை நீக்கியது. அதனால் எரிவாயுவின் விலை ஒரே இரவில் இரண்டு மடங்காக அதிகரித்தது. 120 டெஞ்ஜ்-ஆக அதிகரித்த விலையேற்றத்தைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் இறங்கின.

மேலும், போராட்டம் பல மாநிலங்களில் வெடிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, போராடும் மக்களை ஒடுக்குவதற்காக காவலர்களை அனுப்பி வைத்தது அந்நாட்டு அரசு. அப்போது காவலர்கள் போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு கண்ணீர்புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அப்புறப்படுத்தியது.

இதன்காரணமாக எரிபொருளின் விலையேற்றத்தால் தொடங்கியப் போராட்டம் அரசுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்துள்ளது. மேலும் 30 ஆண்டுகளாக எந்தவித பொருளாதார வளர்ச்சியையும் அடையாத நிலையில் உள்ளதாகக் கூறி அதிபர் நூர்சுல்தான் நசார்பயேவின் 30 ஆண்டுக்கால ஆட்சியின் மீது அதிருப்தியை வெளிபடுத்தி வந்தன.

இதனால் போராட்டம் பல இடங்களில் பெரும் வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து ஜனாதிபதி டோகாயேவ் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியிருக்கிறார். மேலும் போராடும் மக்களை கடுப்படுத்த ராணுவப்படைகளை அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் சோவியத் ஒன்றிய அரசாக இருந்த ரஷ்யாவிடன் இருந்த நல்ல உறவுக் காரணமாக, ரஷ்யாவின் ராணுவத்தை ஆதரவுக்கு கோரியுள்ளது கஜகஸ்தான் அரசு. இந்த சூழலில் ரஷ்ய ராணுவப் படைகளை கஜகஸ்தானுக்கு விரைந்துள்ளது.

Also Read: பெற்றோர்களே எச்சரிக்கை.. விளக்கெண்ணெய் வைத்தியத்தால் பிஞ்சு குழந்தை பரிதாப பலி - நடந்தது என்ன?