உலகம்
மியான்மர் சுரங்கத்தில் நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் நிலை என்ன?
மியான்மர் நாட்டில் கச்சின் மகாணத்தில் பச்சைக் கற்கள் வெட்டும் சுரங்கம் உள்ளது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம்போல் இன்று கற்கள் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பணியிலிருந்த 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
இந்த நிலச்சரிவு சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 25 தொழிலாளர்களை மீட்டு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.
மேலும், மண்ணுக்கு அடியில் தொழிலாளர்கள் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மியான்மரில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் இது மூன்றாவது நிலச்சரிவு சம்பவமாகும். 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 54 பேர் உயிரிழந்தனர். அதேபோல் 2020ஆம் ஆண்டு நிலச்சரிவில் சிக்கி 160 பேர் உயிரிழந்தனர். இப்போது ஏற்பட்டுள்ள நிலச்சரிவிலும் 100க்கும் மேல் உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Also Read
-
“ஏழை மாணவர்களின் பசி போக்கிய காலை உணவுத் திட்டம்.. திராவிட நாயகர் மு.க.ஸ்டாலினின் தொலைநோக்கு பார்வை”
-
இது பற்றி பேசக்கூடாது என்றால் என்ன நியாயம்? : த.வெ.க அரசுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி!
-
“த.வெ.க ஆட்சியில் தொடர் கதையாகும் பாலியல் தொல்லைகள்” : அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
-
“சிங்கப்பெண் படை தொடக்கத்திற்கு பின்னும்.. தொடரும் பாலியல் குற்றங்கள்.. தூங்குகிறாரா முதல்வர் விஜய்!”
-
முதலமைச்சர் தொகுதியிலேயே... : பள்ளிக்குச் சென்ற சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்!