உலகம்

2008க்கு பிறகு பிறந்தவர்கள் சிகரெட் பிடிக்க தடை - சட்டம் கொண்டுவர நியூசிலாந்து அரசு முடிவு : என்ன காரணம்?

உலகம் முழுவதும் சிககெரட் பிடிப்பவர்களின் எண்ணிக்கை வருடம் தோறும் அதிகரித்தே வருகிறது. மேலும் இளைஞர்கள் அதிகமாகப் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் சிகெரட் மற்றும் புகையிலை போன்றவற்றால் ஆண்டுதோறும் 80 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 2008ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகை பிடிப்பதற்குத் தடை விதிக்க நியூசிலாந்து அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்டத்தை அடுத்த ஆண்டு கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது.

நியூசிலாந்து நாட்டில் புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு 5 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார். மேலும் ஐந்து பேரில் நான்கு பேர் புகைக்பிடிப்பவர்களாக உள்ளனர். அதேபோல் இளைஞர்கள் 18 வயதுக்கு முன்பே புகைப்பிடிக்க துவங்கிவிடுகின்றனர். 15 வயதுக்கு மேற்பட்டவர்களின் 11.6%பேர் புகைப்பிடிப்பவர்களாக இருக்கின்றனர்.

இதனால் புகைப்பழக்கத்திலிருந்து இளைஞர்களைக் காப்பாற்றும் விதமாக சிகரெட்டிற்கு தடை விதிக்க நியூசிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்டத்தை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட இருக்கின்றனர்.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் 2025ம் ஆண்டு 5% புகைப்பிடிப்பவர்கள் எண்ணிக்கை குறைந்திருக்கும். மேலும் 2027 முதல் புகையில்லாத தலைமுறையே நோக்கி நியூசிலாந்து பயணிக்கும் என நியூசிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை நியூசிலாந்தில் வெற்றி பெற்றால் இதை மற்ற நாடுகளும் பின்பற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: “இதுதான் கடைசி ஆசை..” : 77 வயதில் பனிச்சறுக்கு விளையாடி அசத்திய புற்றுநோய் பாதித்த முதியவர்!