உலகம்
‘லூசி’ - பரிணாமவியல் தத்துவத்துக்கான சான்றாக அறிவுலகம் திமிரோடு தூக்கிச் சுமக்கும் புதைபடிம சாட்சி!
நவம்பர் 24ஆம் தேதி முக்கியமான ஒருவரின் பிறந்தநாள்.
லூசி!
'நீ அல்கா இர்க்கேன்னு நெனிக்கல. உன்ன லவ் பண்ணனும்னும் நெனிக்கல. ஆனா, இதெல்லாம் நட்ந்துடுமோன்னு பயமா இர்க்கு!' என விஞ்ஞானம் ஒரு எலும்பு புதைபடிமக்கூட்டை பார்த்து சொன்ன தினம் அது!
ஆஸ்ட்ரெலோபித்தகஸ் என்னும் மனித பொது மூதாதையின் எழும்புக்கூட்டு படிமங்களை 1974ஆம் ஆண்டின் நவம்பர் 24ஆம் தேதி எத்தியோப்பியாவில் கண்டுபிடித்தார்கள். அதுவரை, ஆஸ்ட்ரெலோபித்தகஸ்ஸின் எலும்புகளை ஒன்று, இரண்டு என சில்லரையாக கண்டுபிடித்துக் கொண்டிருந்த அகழ்வாராய்ச்சி உலகத்துக்கு 40% கூடு கிடைத்தது ஜாக்பாட்தான்.
ஏன் லூசி முக்கியத்துவம் வாய்ந்தவள் ஆனாள்?
நிமிர்நடை கொண்ட மூதாதைக்கான ஒரே புதைபடிம சாட்சி லூசிதான். மற்ற வாலில்லா குரங்குகளிலிருந்து மேம்பட்டு, நிமிர்ந்தநடைக்கான முதுகெலும்புக்கூட்டை லூசி பெற்றிருந்தாள். 32 லட்சம் வருடங்களுக்கு முன் இவள் வாழ்ந்திருக்கலாம் என அவதானிக்கப்படுகிறது. இக்கண்டுபிடிப்பை அகழ்வாராய்ச்சியாளர் டொனால்ட் ஜொஹான்சன் தன் குழுவுடன் கொண்டாடுகையில் பாட்டு கேட்கலாம் என ஒரு கேஸட்டை எடுத்து டேப் ரிகார்டரில் போடுகிறார். அதில் ஒலித்த முதற்பாடல் Beatles-ன் Lucy in the sky with the diamonds பாடல். அப்படித்தான் லூசி என்ற பெயர் வந்தது.
லூசியின் உலகில் என்ன இருந்திருக்கும் என கற்பனை செய்வதே அலாதிதான். கண்டிப்பாக மனித வாழ்க்கைக்கான எந்தவித சாயலும் இருந்திருக்காது, நிமிர்நடையைத் தவிர. மரவாழ் சூழல் இல்லாமல் போயிருக்கலாம். இரை தேடி நிலம் வந்ததால் அல்லது புதுவாழ்சூழல் தேடியலையத் தொடங்கியதால் நிமிர்நடை கைவந்ததா என தெரியவில்லை. படைப்பாற்றல் தோன்றியிருக்காது. ஆனால் அதற்கான ஆதிபடிமம் லூசியுள் உறைந்து கிடந்திருக்குமா? இரவு வானம் பார்க்கையில் நடசத்திரங்களை பார்த்து கண் சிமிட்டியிருப்பாளா?
எல்லாவற்றுக்கும் மேலாக இன்றளவும் டார்வினை ஏற்காத கூட்டங்கள் வாழ்ந்துகொண்டிருக்கையில் பரிணாமவியல் தத்துவத்துக்கான சான்றாக அறிவுலகம் திமிரோடு தூக்கிச் சுமப்பது லூசியைத்தான். பரிணாமச்சங்கிலியின் பல பொது மூதாதைகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் அறிவுலகத்தின் ஏவாள் லூசிதான்.
குறிப்பு: Scarlett Johanssen நடித்த Lucy படமும் இதை தொட்டுத்தான் எடுக்கப்பட்டது. மூளையின் முழு செயல்திறனையும் அடையும் பெண்ணாக ஸ்கார்லட் நடித்திருப்பார். படத்தின் இறுதியில் மூளையின் முழுத்திறனால் மொத்த மனித பரிணாமத்தையும் மனதுள் ஓட்டிப் பார்க்கும்போது, ஒரு காட்சியில் ஸ்கார்லட் தொட கைநீட்டும் அந்தக் குரங்கு இந்த லூசிதான்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!