உலகம்

உடனே இந்த ஆப்களை அன்இன்ஸ்டால் பண்ணுங்க.. பயனர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்த Google!

உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது என்ற அளவிற்கு மக்கள் Android, Apple போன்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பாடல்கள், சினிமா, பணப் பரிவர்த்தனை போன்றவற்றிற்காக பல செயலிகளை Google Play Store-ல் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர்.

இந்நிலையில் Google Play Store-ல் இருக்கும் 151 செயலிகளிலிருந்து UltimaSMS மூலம் முறைகேடுகள் நடந்துள்ளதை Avast கண்டுபிடித்துள்ளது. இதுகுறித்து Google-லிடம் உரிய ஆதாரங்களுடன் Avast தெரிவித்துள்ளது.

உடனே 151 ஆப்புகளையும் play Store-ல் இருந்து நீக்கியுள்ளது கூகுள். ஆனால் இதைப் பதிவிறக்கம் செய்தவர்கள் இந்த ஆப்களை தங்களின் செல்போன்களில் இருந்து இன்னும் நீக்காமல் உள்ளனர். மேலும் இந்த ஆப்களை 10.5 லட்சத்திற்கும் அதிகமான பயனாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

மேலும் இந்த ஆப்களை பதிவிறக்கும்போது, பயனர்களின் இருப்பிடம், IMEI எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவற்றைச் சரிபார்க்கிறது. இந்த தகவல்கள் வெளியே விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் பயனர்களின் கணக்கிலிருந்து மாதம் ரூ.3 ஆயிரம் வரை பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் Avast தெரிவித்துள்ளது.

Also Read: டி.வி நிகழ்ச்சி மூலம் மாட்டிக்கொண்ட கொடூர கொலையாளி... ஜான் லிஸ்ட் சொன்ன காரணம் என்ன தெரியுமா?