உலகம்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்ததா வடகொரியா? - அதிபர் கிம் பற்றி வெளியாகும் செய்தி உண்மையா?
சமூக வலைதளங்களில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு நாட்டைப் பற்றிய செய்திகள் சர்வ சாதாரணமாக, அதுவும் பொய் செய்திகள் பரவுகிறது என்றால் அது வடகொரியா பற்றிய செய்திகளாகத்தான் இருக்கும்.
குறிப்பாக வட கொரியா பற்றிய வந்திகளும், அதிபர் கிம் பற்றி கிளம்பிவிடப்படும் பொய் குற்றச்சாட்டுகளும் உலக அளவில் தொடர்ந்து வருகிறது. அந்தவகையில், சமீபத்தில் கூட, வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், அவரது மரணம் குறித்த செய்தியை அந்நாட்டு அரசு மறைத்துவிட்டதாக பல்வேறு கட்டுக்கதைகளை சில குறிப்பிட்ட ஊடகங்கள் மக்கள் மத்தியில் பரப்பி வந்தன.
இதனையடுத்து கிம் ஜாங் உன்னுக்கு எதுவும் ஆகவில்லை என்றும் அவர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் தென் கொரியா உயரதிகாரிகள் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் தற்போது, வடகொரியாவில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்குதல் நடத்தும் இரண்டு ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் நாடு மீது சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளதாகவும், இந்தப் பரிசோதனை செய்த வடகொரியா மீண்டும் ஏவுகணைகளை பரிசோதனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஏவுகணைகள் கடலில் விழுந்ததாகவும், ஜப்பானுக்கும் கொரியா தீபகற்பத்திற்கும் இடையே கடல்பகுதியில் ஏவுகளை விழுந்ததாகவும் ஜப்பான் - தென்கொரியா ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதுமட்டுல்லாது ஐ.நாவில் இடம்பெறாத வடகொரியா நாடு, ஐ.நா கட்டுப்பாடுகளை மீறிவிட்டதாகவும் கூறுகின்றனர்.
உண்மையில் வடகொரியா ‘இரும்புத்திரை நாடு’ எனக் கூறப்படுகிறது. ஆனால் வட கொரியா அதிபர் ஹேர்ஸ்டைல் முதல் அவர் மனிதர்களை கொலை செய்வார் என்பது வரை தங்களுக்கு தோன்றிய கற்பனைக் கதைகளை செய்தியாக்கி வருவது வேடிக்கையானது. வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதற்கான எந்த ஆதாரமும் தற்போது வரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!