உலகம்
“கால்பந்து ஆட்டத்தின் காட்பாதர் டீகோ மரடோனா காலமானார்”: உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இரங்கல்!
அர்ஜெண்டினா நாட்டை சேர்ந்தவர் டீகோ மரடோனா. இவர் உலகில் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் முதன்மையானவர். தனது கால்பந்து ஆட்டத்தின் மூலம் கால்பந்து ரசிகர்களின் ஆதர்சன நாயகனாக திகழ்ந்தவர்.
அதுமட்டுமல்லாது, எல்லா காலத்திலும் கால்பந்து ரசிகர்களுக்கும் விருப்பமான வீரராக இருந்தார் மரடோனா. இவர் தனது சிறுவயதில் இருந்தே கால்பந்து ஆட்டத்தின் மீது இருந்த தீராத காதலால் தனது இலட்சியமான உலகக்கோப்பையை வென்றார்.
அர்ஜெண்டினா அணிக்காக விளையாடிய இவர் அந்த அணி 1986ம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார். மேலும் நாட்டின் புரட்சியாளரும் அந்நாட்டின் அதிபராகவும் இந்த பிடல் காஸ்ட்ரோவின் ஆதரவாளராக இருந்தவர்.
இந்நிலையில், பிடல் காஸ்ட்ரோவின் நினைவு நாளான நேற்றைய தினம் மரடோனா, மரணம் நிகழ்ந்திருக்கிறது. மரடோனாவுக்கு கடந்த 2005ம் ஆண்டு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 60 வயதான மரடோனாவுக்கு மூளையில் ரத்தம் உறைந்ததால் அவர் அறுவை சிகிச்சைக்காக நவம்பர் மாத தொடக்கத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார் ஆன நிலையில், புதன்கிழமை மரடோனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மரடோனாவின் மறைவுச் செய்தியை அவரது செய்தித் தொடர்பாளர் மற்றும் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளனர்.
மரடோனா மறைவைத் தொடர்ந்து அர்ஜென்டினாவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டுப் அதிபர் அல்பெர்டோ ஃபெர்னாண்டஸ் அறிவித்துள்ளார். மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள், கால்பந்து வீரர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!