உலகம்

உணவு பற்றாக்குறை : கறிக்காக வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை கையகப்படுத்தும் வடகொரியா?

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அந்நாட்டுக் குடிமக்களை தங்களது வீட்டு நாய்களை அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த நாய்களை உணவு பற்றாக்குறை நிலவுவதால் உணவகங்களுக்குக் கறிக்காக அனுப்பி வைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்று உலகெங்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதால் வடகொரியா உணவு பற்றாக்குறையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க கிம் ஜோங் உன் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணியான நாய்களை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாகக் கடுமையான நெருக்கடிக்கு வடகொரிய அரசு ஆளாகியுள்ளது. மேலும் மக்கள் ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு வருவதால் உணவு பற்றாக்குறையும் கடுமையாக உள்ளது என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

Also Read: “பிற நாடுகளின் உதவிகள் தேவை இல்லை” : ஊரடங்கை முழுமையாக நீக்கிய வடகொரியா - வழக்கமான பணியில் கிம் ஜாங் உன்!