உலகம்

“5.67 லட்சத்தைக் கடந்த உயிர்பலி - 1.28 கோடி பேருக்கு பாதிப்பு” : உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாக உலக நாடுகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வருகிறது கொரோனா பெருந்தொற்று.

உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு 12,630,872 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சுமார் 562,888 பேர் கொரோனா தொற்றால் பலியாகி உள்ளனர்.

அதிகட்சமாக அமெரிக்காவில் மட்டும் 3,355,646 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 137,403 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் 1,840,812 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 71,492 பேர் பலியாகியுள்ளனர். முன்னதாக இரண்டாவது இடத்தில் இருந்த ரஷ்யா, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தற்போது 4வது இடத்தில் உள்ளது.

அதேப்போல் 4வது இடத்தில் இருந்த இந்தியா 3வது இடத்திற்குச் சென்றுள்ளது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது. பலியானோர் எண்ணிக்கை 22,687 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களில் சுமார் 43 சதவீதமானோர்கள் 30 முதல் 59 வயதுடையவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: 30-59 வயதுக்குட்பட்டவர்களே கொரோனாவால் அதிகம் பலியாகும் அவலம் - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!