உலகம்

“Incognito பயனாளர்களின் அந்தரங்கம் கண்காணிக்கப்படுகிறது?”: கூகுள் நிறுவனம் மீது வழக்கு - அதிர்ச்சி தகவல்!

உலகம் முழுவதும் இணையத்தள தேடலில் முன்னிலையில் இருப்பது கூகுள். கூகுள் நிறுவனம் பல தொழில்நுட்பங்களை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இன்று பலரும் தவிர்க முடியாமால் கூகுள் தெடுபொறியை நம்பியே தங்களது பணியை நகர்த்திச் செல்கின்றனர்.

குறிப்பாக கூகுள் இணையதளத்தில் உள்ள பயன்பாடு பாதுகாப்பானது என்பதால் தான் அதிக பயன்பாட்டாளர்களை கூகுள் நிறுவனம் பெற்றிருக்கிறது. இருப்பினும், இந்த இணையதள பயன்பாட்டின் பாதுகாப்பு குறித்து அவ்வபோது பல்வேறு சந்தேங்களும், அச்சங்களும் எழுகிறது.

இந்நிலையில் தற்போது கூகுளின் ‘இன்காக்னிடோ மோட்’ பயன்படுத்துவோரின் தனிப்பட்ட அந்தரங்க உரிமைகளை மீறி பயனளார்களின் அந்தரங்கத்தை கூகுள் நிறுவனம் கண்காணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக போயஸ் ஷில்லர் பிளெக்ஸ்னர் என்ற சட்ட நிறுவனம் கலிஃபோர்னியாவின் சான் ஜோஸில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் இதுகுறித்து புகார் ஒன்றை அளித்துள்ளது. அந்த புகார் மனுவில், கூகுள் பயனாளர்களின் செல்போன் மற்றும் கணினி மூலம் பயனாளர்களின் அந்தரங்கம் மற்றும் அங்கீரிக்கப்படாத தரவு சேகரிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

எனவே அதற்கு இழப்பீட்டாக கூகுள் நிறுவனம் 37,500 கோடி ரூபாய் (5 பில்லியன் டாலர்) வழங்கவேண்டும் என்றும் கேட்டுள்ளது. ஆனால் போயஸ் ஷில்லர் பிளெக்ஸ்னர் புகாரை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டால் கூகுள் பயனாளர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Also Read: வீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்