தமிழ்நாடு

வீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்

கொரோனா ஊரடங்கால் வீடியோகால் மூலம் பாலியல் தொழில் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

வீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா ஊரடங்கால் நாட்டின் பல்வேறு நிலை தொழிலாளர்கள் கடும் பாதிப்பைச் சந்தித்து வருகின்றனர். முறையாக 3 வேளை உணவு கூட இல்லாமல் பலர் நாட்களை நகர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அப்படிப்பட்ட நிலையில் தான் பாலியல் தொழிலாளர்களும் தவித்து வருகின்றனர். உடல் சார்ந்த தொழில் என்பதால், கொரோனா அச்சம் காரணமாக பாலியல் தொழில் நடத்த முடியாத சூழ்நிலை. குடும்பத்தை காப்பாற்ற இத் தொழிலை வேறு வழியின்றி செய்து வரும் இப்பெண்கள் தற்போது கடும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர். அரசு வழங்கும் சொற்ப நிவாரண உதவிகளை வைத்து 3 மாதத்தை கடத்திவிட முடியும் என்பது இயலாத காரியம்.

இச்சூழலை, ஓரளவு சமாளிக்க தொழில் நுட்பத்தை கையில் எடுத்திருப்பதாக பாலியல் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். வீடியோ கால் மூலம் செக்ஸ் சாட் செய்யும் முறையை அவர்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதற்கான பணத்தை கூகுள் பே செயலி மூலம் பெற்றுக் கொள்கின்றனர்.

இது போன்ற செக்ஸ் சாட் பெரும்பாலும், ஊரடங்கில் தனியாக வசித்து வரும் ஆண்களே விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதில் கிடைக்கும் வருமான சொற்பம் என்றாலும், ஒன்றுமே இல்லாததற்கு ஏதோ ஒன்று என்ற நிலையில் இதை கையில் எடுக்கின்றனர். இணையத்தில் போர்ன் வீடியோக்கள் கொட்டிக் கிடந்தாலும், பலர் செக்ஸ் சாட் விரும்புவதாகக் கூறப்படுகிறது. வீடியோகால் செய்யும் அளவுக்கு தொழில்நுட்ப வசதி பெற்றவர்களும், தெரிந்தவர்களும் குறைவு என்பதால், இளம் வயதைச் சேர்ந்த பெண்களே இதில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

வீடியோ கால்களை ரெக்கார்டு செய்து பரப்பும் ஆபத்தும் இதில் உள்ளது. பல பெண்கள் தங்கள் குடும்பத்தினருக்கு தெரியாமல், வீட்டில் இருந்தபடியே ரகசியமாக வீடியோ கால்களை செய்வதால் சங்கட நிலைக்கு ஆளாவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது ஒரு புறம் என்றாலும், மறு புறம் பாலியல் தொழில் செய்து வந்த பெண்கள் இந்த ஊரடங்கு காலத்தில், மாஸ்க் செய்து விற்பது, கோழி வளர்ப்பு, நாட்டு முட்டைகள் விற்பனை என்று சூழலுக்கு ஏற்ப தொழில் செய்து வருமானம் ஈட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

சில தொண்டு நிறுவனங்கள் பாலியல் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகள் செய்த போதும், அவர்களை முழுமையாக இதிலிருந்து விடுவித்து நல்வாழ்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

நன்றி: Times Of India

banner

Related Stories

Related Stories