உலகம்
“இராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய கிம் ஜாங் உன்” : கொரோனா பாதிப்பு இல்லாததால் வழக்கமான பணியில் வடகொரியா!
உலக நாடுகளை கொரோனா அச்சுறுத்திவரும் வேளையிலும் வட கொரியா பற்றிய வந்திகளும், அதிபர் கிம் பற்றி கிளம்பிவிடப்படும் பொய் குற்றச்சாட்டுகளும் உலக அளவில் தொடர்ந்து வருகிறது.
குறிப்பாக, வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு உடல் பருமன் காரணமாக இந்த மாத தொடக்கத்தில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காததால் அவரது உடல்நிலை குறித்து ஏராளமான வதந்திகள் பரவின.
குறிப்பாக, கிம் ஜாங் உன்-னின் உடல்நிலை மோசமாகிவிட்டதாக அமெரிக்கா ஊடகங்கள் செய்தி வெளியிட அது தீயாய் உலக நாடுகளுக்குப் பரவியது. பின்னர் ஒருகட்டத்தில் அவர் மரணம் குறித்த செய்தியை அந்நாட்டு அரசு மறைத்துவிட்டதாக பல்வேறு கட்டுக்கதைகளை சில குறிப்பிட்ட ஊடகங்கள் மக்கள் மத்தியில் பரப்பி வந்தன.
இதனிடையே கிம் ஜாங் உன்னுக்கு எதுவும் ஆகவில்லை என்றும் அவர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் தென் கொரியா உயரதிகாரிகள் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில், இருபது நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக பொது வெளியில் கிம் ஜாங் உன் தோன்றியதாக வட கொரியா அரசு ஊடகமே தெரிவித்திருந்தது.
வட கொரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை என அந்நாட்டு சுகாதாரத்துறை கூறிவரும் வேளையில் வழக்கமாக செயல்படுவதைப் போலவே வட கொரியா தற்போது செய்ல்படுவதாக கூறப்படுகிறது. இது உண்மை என நிரூபிக்கும் வகையில் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் நேற்று மீண்டும் பொதுவெளியில் தோன்றி இராணுவம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பாக, வட கொரியா அரசு ஊடகமான கே.சி.என்.ஏ வெளியிட்ட தகவலின்படி, நேற்று வட கொரியாவில் முக்கிய இராணுவக் கூட்டத்தில் அதிபர் கிம் கலந்துகொண்டதாக கூறியுள்ளது. மேலும், அதிபர் கிம் கலந்துகொண்ட கூட்டத்தில் வட கொரியா ஆயுதப் படைகளை மிகுந்த எச்சரிக்கையுடன் வைப்பது மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் அச்சுறுத்தல் தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, வட கொரியாவின் இராணுவ மன உறுதியை வலுப்படுத்துவதற்கு இராணுவ தளபதிகள் மற்றும் இராணுவ வீர்களுடன் வட கொரிய ராணுவத்தின் தலைவர் கிம் ஜாங் உன், துணை தலைவர் பாக் ஜாங் சோன் ஆயுத மேம்பாட்டு பொறுப்பில் இருக்கும் அந்நாட்டு ஆளும் கட்சியின் மூத்த அதிகாரி பியோங் சோல் ஆகியோர் ஆலோசனை நடத்தியதாகவும் அதில், அணு ஆயுங்களை இன்னும் மேம்படுத்துவது பற்றியும் பேசப்பட்டதாகவும் கே.சி.என்.ஏ குறிப்பிட்டுள்ளது.
வட கொரியாவின் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்திவரும் வேளையில் அதிபர் கிம் ஜாங் உன்னின் இந்த இராணுவ ஆலோசனை கூட்டம் உலக நாடுகளை கலக்கம் அடையச் செய்துள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!