உலகம்
அரசுக்கு எதிராக 288 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்திய 28 வயது பெண் மரணம்!
துருக்கி நாட்டில் ‘குரூப் யோரம்’ என்ற பிரபலமான நாட்டுப்புற இசைக்குழுவை சேர்ந்தவர் இளம்பெண் ஹெலின் போலக். அவருக்கு வயது 28.
இவர் உட்பட அந்த இசைக்குழுவைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டு அரசின் செயல்பாடுகளுக்கு எதிராக புரட்சிகரமான கருத்துகளை பாடல் வடிவாக எடுத்துரைத்து வந்தனர். இதனால் துருக்கி அரசு குரூப் யோரம் இசைக்குழுவை கடந்த 2016ம் ஆண்டு தடை செய்ததோடு அந்தக் குழுவைச் சேர்ந்த சிலரை கைது செய்து சிறையில் அடைத்தது.
இதனையடுத்து, தங்களது இசைக்குழு மீதான தடையை நீக்கக் கோரியும், கைதானவர்களை விடுவிக்கக் கோரியும் ஹெலின் போலக் தனது பட்டினி போராட்டத்தை தொடங்கினார். சுமார் 288 நாட்களுக்கு அவரது போராட்டம் நீடித்தது.
இதற்கிடையே கடந்த மாதம் ஹெலினின் உடல்நிலை மோசமானதால் மனித உரிமை ஆர்வலர்கள் துருக்கி அரசிடம் ஹெலினின் நிலை குறித்து பேசியது. அப்போது, ஹெலின் தனது போராட்டத்தை கைவிட்டால் அவரது கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என கூறியது.
பின்னர், கடந்த மார்ச் 11 அன்று, ஹெலின் போலக்கின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்ததால் அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். ஆனால், அங்கு சிகிச்சைக்கு ஹெலின் ஒத்துழைக்க மறுத்ததால் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார்.
அப்போதும் உடல்நிலையை கருத்தில் கொள்ளாமல் வீட்டில் இருந்தபடியே தன்னுடைய போராட்டத்தை தொடர்ந்திருக்கிறார் ஹெலின் போலக். இந்நிலையில், நேற்று முன்தினம், ஹெலின் போலக் உயிரிழந்திருக்கிறார். ஹெலினின் மறைவு அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
’உங்களுடன் ஸ்டாலின்’ - மக்களுக்கு சரியான தீர்வு கிடைக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
சென்னையில் இன்று மழை பெய்யுமா? : வானிலை நிலவரம் என்ன?
-
“வட சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுக்க குடிசைகள் இருக்கக் கூடாது!” : துணை முதலமைச்சர் சூளுரை!