உலகம்

இளவரசர் சார்லஸுக்கு கொரோனா பாதிப்பு - உறுதி செய்து அறிவித்தது இங்கிலாந்து அரச குடும்பம்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் இங்கிலாந்தில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 422 பேர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக அங்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 71 வயதான சார்லஸ் ஸ்காட்லாந்தில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சமீபகாலமாக இளவரசர் சார்லஸ், கைகுலுக்கும் முறைக்குப் பதிலாக கைகூப்பி வணக்கம் செலுத்தி வந்தார். கொரோனா வைரஸ் தொற்று அபாயம் கருதி அவர் இவ்வாறு செயல்பட்டார்.

இந்நிலையில் இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை இங்கிலாந்து அரச குடும்ப வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் இங்கிலாந்து மட்டுமல்லாது உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து 71 வயதான இளவரசர் சார்லஸ் ஸ்காட்லாந்தில் உள்ள இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், அவரது மனைவியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Also Read: “EMI செலுத்த கால நீட்டிப்பு... கடனுக்கான வட்டி தள்ளுபடி” - மக்களின் கோரிக்கையை ஏற்குமா ரிசர்வ் வங்கி?