உலகம்
Bio Warஐ உருவாக்க சதி தீட்டியதா சீன அரசு? - கொரோனா வைரஸ் பற்றி 1981ம் ஆண்டே கணித்த அமெரிக்க நாவலாசிரியர்
சீன நாட்டின் வளர்ச்சியும், உற்பத்தியும் எந்த அளவுக்கு உலக அளவில் வியப்பை ஏற்படுத்தி வருகிறதோ அதே அளவுக்கு தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் பரவிய இந்த வைரஸ் தொற்றால் இதுவரையில் ஆயிரத்து 700க்கும் மேலானோர் உயிரிழந்திருக்கின்றனர். 60 ஆயிரத்துக்கும் மேலானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், இனி ஏற்படாமல் தடுப்பதற்கும் மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்கப்படாததால் சீன அரசு செய்வதறியாது தவித்து வருகிறது. இதற்கிடையே, சர்வதேச மருத்துவ அவசர நிலையை அறிவித்து உலக நாடுகள் அனைத்தையும் உஷார் நிலையில் இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளது உலக சுகாதார நிறுவனம்.
இந்நிலையில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து கடந்த வாரம் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்ட உலக சுகாதார மையம், இந்த கொரோனா வைரஸுக்கு COVID-19 என புதுப் பெயரை அறிவித்தது.
அதில், CO-Corona, VI-Virus, D-Disease என்றும் 2019ல் வைரஸ் தொற்று பரவியதால் 19 என குறிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இப்படி இருக்கையில், 1981ம் ஆண்டு வெளியான The Eyes of Darkness என்ற திகில் நாவலில் தற்போது உலகையே அச்சுறுத்தும் கொரோனா(கோவிட்) நோய் தொற்று குறித்து குறிப்பிடப்பட்டது.
டீன் கூன்ட்ஸ் என்பவர் எழுதிய இந்த நாவலில், போர் மூளும் போது Bio Weaponஐ பயன்படுத்துவதற்காக சீன ராணுவ ஆய்வகம் வூஹான்-400 என்ற உயிர் கொல்லியை உருவாக்கியுள்ளது. அது தவறுதலாக வெளியே பரவி மனிதர்களை மட்டுமே பாதிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது போலவே தற்போது சீனாவின் வூஹான் நகரில் ஏற்பட்டுள்ள கோவிட் (கொரோனா வைரஸ்) -19 ஆயிரக்கணக்கான உயிர்களை பலிவாங்கியுள்ளது. இந்த நிகழ்வுகள் அனைத்தும் டீன் கூன்ட்ஸ் எழுதிய நாவலில் குறிப்பிட்டதை போல ஒத்துப் போவதால் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்பே கணித்து எழுதியிருப்பதாக டீன் கூன்ட்ஸை மக்கள் பாராட்டியும் வருகின்றனர்.
Also Read
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!