உலகம்

உலகிலேயே மிகமிக இளம் பிரதமர் இவர்தான்... தபால் துறை வேலை நிறுத்தத்தால் கிடைத்த வாய்ப்பு!

உலகளவில் பெண்கள் ஆட்சி அதிகாரங்களில் இடம்பெறும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் அரசு அமைப்புகளில் ஆண்களுக்கு நிகராக இளம்பெண்களின் ஆதிக்கம் செலுத்தும் போக்கு வலுத்து வருகிறது.

இப்படி இருக்கையில் பின்லாந்து நாட்டில் மூன்றாவது முறையாக பெண் ஒருவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதில் கூடுதல் தகவல் என்னவெனில் வெறும் முப்பத்தி நான்கே வயதான இவர் உலகிம் இளம் வயது பெண் பிரதமாராவார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் சமூக ஜனநாயக கட்சி வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்து வந்தது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற தபால் துறை வேலை நிறுத்தத்தை முறையாகக் கையாளாததால் பின்லாந்து பிரதமராக இருந்த அண்டி ரின்னே பதவி விலகினார்.

இதனையடுத்து, சமூக ஜனநாயக கட்சி சார்பில் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார், போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த சன்னா மரின்.

முன்னதாக உக்ரைன் நாட்டின் பிரதமராக இருக்கும் ஒலெக்ஸி ஹான்ருக் (35) உலகின் மிக இளம் வயது பிரதமர் என்ற பெருமையைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: டென்னிஸ் ஜாம்பவான் ஃபெடரரை திணற வைத்த இந்திய இளம் வீரர் : சர்வதேச அளவில் குவியும் பாராட்டுகள் !