உலகம்

“தனக்கு கிடைத்த உயரிய விருதை வாங்க மறுத்த சூழலியல் போராளி”- ஏன் தெரியுமா?

சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் 12 வயது சிறுமி கிரேட்டா தன்பெர்க். பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைக் காக்க, உலகத்தலைவர்கள் முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரின் பிரச்சாரம் உலக நாட்டு மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும், கிரேட்டாவுக்கு ஆதரவாக பல நாடுகளைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்களும், பள்ளி மாணவர்களும் இணைந்து பிரசாரத்தை மாபெரும் போராட்டமாக மாற்றினார்கள். குறிப்பாக, இவரின் தலைமையில் பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

முன்னதாக, ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கடந்த கிரேட்டா தன்பெர்க் பங்கேற்று பேசினார். அப்போது அந்த மாநாட்டில் பேசிய சிறுமி உலகநாடுகளின் தலைவர்களை நோக்கி ஆக்ரோஷமாக பேசினார்.

'பருவநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்?( How Dare You?)' என ஆக்ரோஷமாக முழங்கினார். அவர் பேசிய வார்த்தைகள் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, பல சூழலியல் போராட்டத்திற்கு தன்னை முன்னிலைப் படுத்தி போராடி வருகிறார். அவரின் போராட்டத்தை அடுத்து சுவிடன் நாட்டின் ஸ்டால்க்ஹோம் நகரத்தில் உள்ள ‘ஸ்டால்க்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்’ நோர்டிக் கவுன்சில் என்னும் அமைப்பின் சார்பில் இலக்கியம், திரைப்படம், இசை மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கான வருடாந்திர பரிசுகளை வழங்குகிறது. அதன்படி இந்தாண்டுக்கான சூழலியலாளருக்கான விருதை கிரேட்டா தன்பர்க்கிற்கு வழங்க முடிவு செய்தது.

இதனையடுத்து ஸ்டால்க்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் கிரேட்டா தன்பர்க் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை அறிவித்தது. சுவிடன் நாட்டின் உயரிய விருதாக இது பார்க்கப்படுகிறது. மேலும் அந்த விருதுடன் இந்திய மதிப்பில் சுமார் 37 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் கிடைக்கும். விருதுக்கு தேர்வான கிரேட்டாவிற்கு வாழ்த்துகள் குவிந்துவண்ணம் இருந்தது.

இந்நிலையில், தனக்கு அந்த விருது வேண்டாம் என கிரேட்டா தன்பர்க் மறுத்துள்ளார். கிரேட்டா தன்பர்க் இந்த அறிவிப்பு உலக மக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கிரேட்டா தன்பர்க் கூறுகையில், “ஸ்டால்க்ஹோம் நிறுவனத்தின் விருதுக்கு தேர்வு செய்ததற்கு நன்றி. இந்த விருதுக்கு என்னை பரிந்துரைப்பதை மகிழ்ச்சியாகவும், பெருமையாவும் உணர்கின்றேன்.

சூழலியல் போராட்டத்திற்கு இந்த விருது வழங்கப்படுகிறது. அதனாலே இந்த விருது வேண்டாம் என மறுக்கிறேன். எங்களது போராட்டம் மக்களின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காவே தவிர விருதுக்காக இல்லை. சூழலியல் விசயத்தில் செயலிழந்து கிடக்கும் அதிகாரத்திற்கு எதிராகவே எனது போராட்டம்.

அதுமட்டுமின்றி, எனக்கு விருது வழங்கப்படும் நாடுகளில் ஏகப்பட்ட சூழலியல் பிரச்சனைகள் குவிந்துக் கிடக்கின்றன. அதனை சரிய செய்ய பெரிய முயற்சிகளே இல்லாதபோது இந்த விருது எனக்கு எதற்கு?” என தெரிவித்துள்ளார். இளம் வயதில் இவ்வளவு ஆற்றலும் தேசத்தின் மீது அக்கரையும் சிறுமிக்கு உள்ளதாக பலர் பாராட்டி வருகின்றனர்.