உலகம்
காஷ்மீர் விவகாரத்தில் நான் பஞ்சாயத்து செய்யமாட்டேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல்டி !
ஜி-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பியாரிட்ஸ் நகரில் இன்று நடைபெற்றது. ஜி-7 மாநாட்டில் இந்தியா உறுப்பினராக இல்லை. இருப்பினும், இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்குமாறு மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு விடுத்து இருந்தார்.
மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மோடியும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மோடி, காஷ்மீர் விவகாரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை. அவை குறித்து வேறு எந்த நாட்டையும் அனுமதிப்பது இல்லை என தெரிவித்தார்.
பின்னர் பேசிய டிரம்ப், காஷ்மீர் விவகாரம் குறித்து நாங்கள் பேசினோம். காஷ்மீரில் நிலமை கட்டுப்பாட்டில் உள்ளதாக மோடி உணர்கிறார். காஷ்மீர் பிரச்சனை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகள் இடையேயான பிரச்சனை. இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களது பிரச்னைகளை தாங்களே பேசி தீர்த்து கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என மீண்டும் மீண்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவந்த நிலையில், இன்று காஷ்மீர் விவகாரம் இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனை என அந்தர் பல்டி அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ்நாட்டில் மீட்கப்பட்ட சிறுமி.. சிறையில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த உ.பி. போலீஸ்.. நீதிபதி ஷாக்!
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!