உலகம்
காஷ்மீர் விவகாரம் : சர்வதேச நீதிமன்றத்திற்குச் செல்லும் பாகிஸ்தான் அரசு?
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசு ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதில் இருந்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இது ஜம்மு - காஷ்மீர் மக்கள் மத்தியிலும் மற்றும் பாகிஸ்தான், சீனா நாடுகளிடையும் அதிர்ச்சியை உண்டாக்கியது.
அதனையடுத்து, இந்தியாவுடனான நட்புறவை முறியடித்துக் கொள்வதாக அறிவித்தது. பாகிஸ்தானுக்காக அனுப்பப்பட்ட இந்திய தூதரை திருப்பி அனுப்பியது. இந்தியாவில் இருந்து செயல்பட்டு வந்த வாகன சேவைகளையும் நிறுத்தியது. இதன்மூலம் இருநாடுகளிடையான பிரச்சனை மேலும் அதிகரித்துள்ளது. இந்த பிரச்சனையை முதலாவதாக கையில் எடுத்த பாகிஸ்தான் சர்வதேசப் பிரச்சனையாக மாற்ற உள்ளதாக அறிவித்தது.
முதலில் ஐ.நாவை பாகிஸ்தான் நாடியது. இது இரு நாடுகளுடனான பிரச்சனை இதில் ஐ.நா தலையிடாது. மேலும் ரஷ்யா போன்ற நாடுகளும் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்தது. இதனால் தனித்து விடப்பட்ட பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தை பன்னாட்டு பிரச்சனையாக்க மாற்ற தொடர்ந்து முயற்சி செய்கிறது.
அதாவது, காஷ்மீர் விவகாரத்தை, சர்வதேச நீதிமன்றத்திற்கு, பாகிஸ்தான் எடுத்துச் செல்ல உள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது. பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்முத் குரேசி, “இந்தியாவில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்களை மையமாக வைத்து, பன்னாட்டு நீதிமன்றத்தில், பாகிஸ்தான் முறையிடும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!