உலகம்
லட்சக்கணக்கில் கூடும் மக்களால் ஸ்தம்பிக்கும் ஹாங்காங்: மீண்டு எழும் மக்கள் புரட்சி - குழப்பத்தில் சீனா !
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்து வந்த ஹாங்காங், 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது சீனா நிர்வகிக்கும் கட்டுப்பாட்டுக்குள் ஹாங்காங் உள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் ஹாங்காங் மக்களுக்கென தனி பண மதிப்பு, சட்டம், நிர்வாகம் என இருந்து வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு பரிமாற்றம் செய்வதற்கான சட்ட திருத்தம் செய்வதற்கு முடிவு செய்து, அதற்கான மசோதாவையும் சட்டசபையில் கொண்டு வந்தது. ஆனால் இது ஹாங்காங் மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மக்கள் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஹாங்காங் நிர்வாகம் மக்களின் போராட்டத்திற்கு பிறகு மசோதாவை நிறுத்தி வைத்தது. ஆனாலும் மசோதாவை முழுமையாகத் திரும்பப்பெறவில்லை, மேலும் ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரி லாம் பதவியை விட்டு விலகவேண்டும் என கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் போராட்டக்காரர்கள் தொடர்ச்சியான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று ஹாங்காங் விமான நிலையத்தில் தடையை மீறி போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்று விமான நிலையம் உள்ளே சென்று முழக்கங்களை எழுப்பினார்கள்.
பொருட்களை கொண்டு செல்லும் கன்வேயர் பெல்டுகளிலும் அவர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால் விமான நிலைய செயல்பாடுகள் ஸ்தம்பித்தன. இதையடுத்து ஹாங்காங் விமான நிலையம் நேற்று மூடப்பட்டது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.
உலக நாடுகளை தங்கள் பக்கம் திருப்பவே இத்தகையப் போராட்டத்தில் ஈடுபடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். மசோதாவை திரும்பபெற்றும் அரசியல் சூழ்ச்சிகள் செய்து, அரசைக் கவிழ்க்க இத்தகைய முயற்சி நடைபெற்று வருவதாக சீன அமைச்சரவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சீனாவின் கடினமான கட்டுப்பாடுகளை மீறியும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அடையாளங்களை மறைத்துக்கொண்டு திரண்டிருப்பது சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!