Viral
2 குழந்தைகளுடன் தவறி விழுந்த பெண்... இரயில் ஏறும்போது விபரீதம் : உயிர் பிழைத்த அதிசயம் - பகீர் VIDEO !
இணையத்தில் பல்வேறு வீடியோக்களும் வைரலாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வரும். அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், இரயில்வே தண்டவாளத்தில் தவறி விழுவது, இரயில்வே தண்டவளாத்தின் அருகே நின்று செல்பி எடுக்கும்போது மோதி விபத்துக்குக்குள்ளாவது உள்ளிட்ட இரயில்வே சார்ந்த பலர் வீடியோக்கள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தும்.
அப்படி ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி பலர் மத்தியிலும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பீகார் மாநிலம் பார் இரயில் நிலையத்தில் இருந்து விக்ரம்ஷிலா விரைவு இரயில் நேற்று மாலை வழக்கம்போல் டெல்லிக்கு புறப்பட்டது. அந்த சமயத்தில் இரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அந்த இரயிலில் குடும்பம் ஒன்று அவசரமாக ஏற முயன்றனர்.
அவ்வாறு வேகமாக ஏற முயன்றபோது பெண் ஒருவர் தனது 2 குழந்தைகளுடன் இரயில் நடைமேடை இடையே கால் இடறி விழுந்துவிட்டார். அந்த நேரத்தில் இரயில் புறப்பட்டது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள் கத்தி கூச்சலிட்டனர். மேலும் அந்த பெண் எழுந்தால், இரயிலில் நசுங்கி விடுவார். எனவே தனது குழந்தைகளுடன் உயிரை கையில் பிடித்துக்கொண்டு நன்கு படுத்துக்கொண்டார்.
பிறகு அங்கிருந்து அந்த இரயில் புறப்பட்டு சென்ற பிறகும், அந்த பெண் எழுந்திருக்கவில்லை. இதனால் பதறியடித்த பொதுமக்கள், உடனடியாக தண்டவாளத்தில் இறங்கி அந்த பெண், மற்றும் குழந்தைகளை காப்பாற்றினர். இதனிடையே அந்த பெண்ணின் கணவரும் ஓடும் இரயிலில் இருந்து தனது மனைவியை காண கீழே குதித்தார்.
தொடர்ந்து மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கே பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், யாருக்கும் எந்த காயமும் இல்லை என்று இரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவர் மத்தியிலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் களத்தில் கண்துஞ்சாமல் செயல்பட்டு, மக்களைக் காப்போம்" - முதலமைச்சர் உறுதி !
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? - விவரம் உள்ளே!
-
பருவமழை குறித்து திமுக சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம்... தலைமைக் கழகம் அறிவிப்பு !
-
காவலர் வீரவணக்க நாள் விழா : 175 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
தொடங்கிய வடகிழக்கு பருவமழை... தென்சென்னை பகுதியில் துணை முதலமைச்சர் ஆய்வு!