Viral
விமானத்தில் அம்மாவுக்கு சர்ப்ரைஸ்.. 50வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட வைத்த மகன்- ஒரு நெகிழ்ச்சி கதை
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகர் பகுதியைச் சேர்ந்த சந்திரன். இவரது மனைவி கண்ணம்மாள். இந்த தம்பதியின் மகன் மணிகண்டன்..
இந்நிலையில் தாய் கண்ணம்மாளின் 50வது பிறந்த நாளில் அவருக்கு இதுநாள் வரை கிடைக்காத ஒரு ஆசையை நிறைவேற்ற வேண்டும் என மணிகண்டன் முடிவு செய்துள்ளார்.
இதன்படி தாயைச் சென்னையிலிருந்து பெங்களூருக்கு விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத தாய் கண்ணம்மாள் மகிழ்ச்சியில் ஆனந்தக் கண்ணீரில் மகனைக் கட்டி தழுவியுள்ளார்.
அதோடு, விமானத்தில் ஏறிய சிறிது நேரத்திலேயே பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் முன்பு தாயை கேக் வெட்டச் செய்து அவரது 50வது பறந்த நாளில் மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனார். பின்னர் விமானத்திலிருந்த அனைவரும் கண்ணம்மாளுக்குப் பிறந்தாள் வாழ்த்துக் கூறினர்.
இந்த மகிழ்ச்சியான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து பலரும் தாயின் ஆசையை நிறைவேற்றிய மகன் மணிகண்டனுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!
-
“சொத்துவரி உயர்வு.. சென்னை மக்கள் தலையில் பேரிடி” : முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம்!