Viral
31 வயதில் கருத்தரிப்பு.. வயிற்றிலே இறந்து கல்லான குழந்தையை 92 வயதில் நீக்கிய மருத்துவர்கள் ! - பின்னணி ?
தென் சீனாவைச் சேர்ந்தவர் ஹுவாங் யிஜுன் (Huang Yijun). இவருக்கு 1940-களில் திருமணமான நிலையில், 1948-ம் ஆண்டு தனது 31 வயதில் இவர் கருவுற்றிருந்தார். குழந்தை பிறக்கப்போகிறது என்று ஆனந்தத்தில் இருந்த இவருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. இவரது கருவானது, கருப்பைக் குழாய்க்கு வெளியே ஒட்டிக்கொண்டிருந்தது. இதனால் அந்தக் கரு அடி வயிற்றுப் பகுதியில் வளரும் சூழல் ஏற்பட்டது.
இது போன்ற நிகழ்வு மிகவும் அரிதான ஒன்றாகும். இதனை Ectopic pregnancy என்று அழைப்பர். இதனால் குழந்தை பிறந்தால், குறைபாடுகளுடன் பிறக்கும் அல்லது, குழந்தை, தாய் உயிருக்கு ஆபத்து ஏற்படும். எனவே இது போன்று வளரும் குழந்தைகளை பலரும் கருவிலேயே அழிப்பர். ஆனால் இந்த பெண்ணோ, அந்த குழந்தையை பெற்றெடுக்க விரும்பியதாக கூறப்படுகிறது.
இதனால் குழந்தை கேட்ஜம் வளர்ச்சியடைந்த போது, கருவிலேயே உயிரிழந்தது. வயிற்றினுள்ளே இறந்துபோன சிசுவை வெளியே எடுக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்கு 150 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.12,500) தேவைப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. எனவே, ஹுவாங் யிஜுன் தனது குடும்பத்தாரிடம் கேட்டுள்ளார்.
அப்போது அது பெரிய தொகை என்பதால் அவர்களும் இவருக்கு உதவ முன்வரவில்லை. எனவே இவரும் அந்த சிசுவை வெளியே எடுக்காமல் வயிற்றினுள்ளே வைத்திருந்துள்ளார். இவ்வாறே சுமார் 61 வருடங்களாக தனது வயிற்றில் இறந்த சிசுவை சுமந்து வந்துள்ளார் அந்த பெண். இது குறித்து ஒருவருக்கு தெரியவரவே அவர்கள் உதவியோடு இந்த பெண்ணுக்கு அவரது 92 வயதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவரது வயிற்றில் இறந்து கிடந்த சிசு வெளியே எடுக்கப்பட்டது.
உயிரிழந்த சிசுவின் மீது கால்சியம் பதிவுகள் உருவானதன் காரணமாக வயிற்றிலேயே அது கல் போல் மாறியிருந்தது. 2009-ம் ஆண்டு பெண்ணுக்கு அவரது 92 வயதில் சிசு வெளியே எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் பல வருடங்களுக்கு முன்னாள் நிகழ்ந்த இந்த சம்பவம் குறித்து 'Historic Vids' என்ற 'X' சமூக வலைதளப்பக்கம் வெளியிட்டுள்ளதால், தற்போது மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?